பெற்ற குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

Read Time:3 Minute, 40 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிஞ்சு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மரணத்துக்கு காரணமான தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பின்னர் தமது 3 வயது குழந்தை Kyhesha-Lee Joughin உடன் வாழ்ந்து வந்தார் 32 வயதான Matthew Lee Williamson.

மனைவி மீதிருந்த கோபம், விரக்தி காரணமாக சிறுமி Kyhesha மீது எப்போதும் வெறுப்பையே காட்டி வந்துள்ளார் வில்லியம்சன். இது ஒரு கட்டத்தில் பாலியல் தாக்குதலாக மாறியுள்ளது.

பல நாட்களில் சிறுமி Kyhesha வை படுக்கையோடு இணைத்து கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் தந்தை வில்லியம்சன். சமயங்களில் குழந்தை Kyhesha தொடர்ந்து 17 மணி நேரம் வரை படுக்கையில் கட்டுண்ட நிலையில் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளது.

பல முறை பெற்ற குழந்தையின் முன்னர் நிர்வாணமாகவே இருந்துள்ளதாகவும், சிறுமியை உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதை வாடிக்கையாகவே செய்து வந்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமி Kyhesha வின் அடிவயிற்றில் வில்லியம்சன் கடுமையாக தாக்கியதில் அவருக்கு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறியுள்ளது. மேலும் பச்சை நிறத்தில் தொடர்ந்து வாந்தி எடுக்கவும் செய்துள்ளார்.

இருப்பினும் வில்லியம்சன் சிறுமியை மருத்துவமனைக்கு இட்டுச் செல்ல மறுத்துள்ளதுடன் துஷ்பிரயோகத்தை நிறுத்தவில்லை என இறுதிகட்ட தீர்ப்பின்போது நீதிபதி தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிக்கிச்சையால் குணப்படுத்த முடியும் என்ற போதும் வில்லியம்சன் தமது மகளை காப்பாற்றாமல் கைநெகிழ்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் அனைத்து குற்றங்களையும் மறுத்த வில்லியம்சனை கடுமையாக கண்டித்த நீதிபதி ரோசலின், வில்லியம்சன் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்ததுடன் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

வில்லியம்சனுக்கு எதிரான விசாரணையின்போது அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவி ஜாகின், இந்த விவகாரத்தில் தம்மையே பழித்தார். தமது முடிவு தான் சிறுமி Kyhesha வை பாழ்படுத்தியது என கதறியுள்ளார்.

சிறுமி வில்லியம்சனை உயிருக்கு உயிராக நேசித்த காரணத்தால் மட்டுமே வாய்ப்பு இருந்தும் தாம் சிறுமியை மீட்டுச் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளது நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களை சோகத்தில் தள்ளியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கமித்ராவுக்காக தயாராகும் ஸ்ருதிஹாசன்..!!
Next post விஜய் நடிக்கவிருந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்..!!