ஜெயலலிதா குற்றவாளி அல்ல! அபராதம் வசூலிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Read Time:5 Minute, 2 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90ஜெயலலிதா மறைந்து விட்டதால்தான் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என பிரகடனம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து கர்நாடகாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில் குற்றவாளி என என பிரகடனம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அறிவித்தது.

அத்துடன் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்த கீழ்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்வதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு சென்றனர்.

அதேநேரத்தில் ஜெயலலிதா இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் பிரகடனம் செய்து விட்டதா? இல்லையா? ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராததத்தை கீழ்நீதிமன்றம் விதித்திருந்ததே அது வசூலிக்கப்படுமா? வசூலிக்கப்படாதா? என்ற கேள்விகளும் எழுந்திருந்தன.

இதனிடையே கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேல்முறையீட்டு வழக்கு முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா மறைந்தார்.

ஆகையால் அவரையும் குற்றவாளி என பிரகடனம் செய்து அவருக்கு கீழ்நீதிமன்றம் விதித்திருந்த ரூ100 கோடி அபராதத்தை வசூலிப்பது குறித்து உத்தரவிட வேண்டும், அதற்காக பெப்ரவரி 14-ந் தேதி அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச், கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

அதாவது ஒருவர் இறந்து விட்ட நிலையில் அவரை வழக்கில் குற்றவாளி என பிரகடனம் செய்ய அரசியல் சாசனத்தில் இடம் இல்லை, ஆகையால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என பிரகடனம் செய்ய இயலாது என நீதிபதிகள் தீர்ப்பளித்து கர்நாடகாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் கர்நாடகா அரசால் நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு விதித்த ரூ100 கோடி அபராத தொகையை வசூலிக்கவும் முடியாது.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின்படி ஜெயலலிதா, குற்றவாளி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுவும் ஜெயலலிதா மறைந்து விட்டதால் தான் குற்றவாளி என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

இருந்த போதும் ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசிகள், இனி உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. எங்கம்மா படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டுவோம் என அலப்பறையை கொடுக்கத்தான் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

இதன்மூலம், தார்மீக ரீதியாக ஜெயலலிதா வழக்கின் முதல் குற்றவாளி என்ற முத்திரை இருந்தாலும் கூட சட்டப்படி, அவர் குற்றவாளி இல்லை.

எனவே அவரது உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாம், பாரத ரத்னா உள்பட எந்த ஒரு உயரிய விருதையும் அவரது பெயரில் வழங்க தடை கிடையாது. அவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டவும் தடையில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனை கொடூரமாக கொலை செய்த காதலிக்கு ஆயுள் தண்டனை..!!
Next post தாய்மை அடைவதற்கான சரியான வயது..!!