கோடை வெயிலை சமாளிக்க பயனுள்ள டிப்ஸ்..!!

Read Time:2 Minute, 42 Second

201704041438290295_summer-hot-simple-useful-tips_SECVPFகோடை என்று வந்து விட்டாலே கை நிறைய பிரச்சினைகள்தான். உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். ஆக வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வெப்ப பக்கவாதம் என்பது உடல் அதிக உஷ்ணத்தினை எடுத்துக் கொள்ளும் பொழுது ஏற்படுகின்றது. மிக அபாயகரமானதான இதனைப் பற்றி ஒவ்வொரு கோடையின் போதும் மக்களுக்கு அறிவுறுத்துவது மருத்துவ துறையின் கடமையாகின்றது.

* சதை வலி, வயிற்று வலி, கை, கால்கள் வலி இவை அனைத்தும் இக்காலத்தில் சர்வ சாதாரணமாய் ஏற்படுகின்றது.

* கொட்டும் வியர்வை, அதை தொடர்ந்து சோர்வு, தலை சுற்றல், தலைவலி, வயிற்று வலி, சதை பிடிப்பு என்று உடலில் நீர் வற்றுவதால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.

* வாய் உலர்ந்து விடுகின்றது. கண் வறண்டு சருமம் வறண்டு வியர்வை கூட இல்லாத நிலைக்கு உடல் காய்ந்து விடுகின்றது. சதைகளில் பிடிப்பு, வயிற்றுப் பிரட்டல், படபடப்பு போன்றவை ஏற்படுகின்றன.

* அதிக நேரம் வெயிலினில் இருந்தால் சருமம் கரி போல் கறுத்து விடுகின்றது.

* உடல் முழுவதும் வேர்குருவும் அதில் ஏற்படும் கிருமி தாக்குதலால் அரிப்பும் ஏற்படுகின்றது.

* பாதங்களில் கிருமி தாக்குதல் ஏற்படுகின்றது.

* பொடுகு தொல்லை அதிகமாகி சொரிவதால் தலை புண்ணாகி விடுகின்றது.

* இக் கடுமையான கோடையில் உடல் செரிமானத்திற்கு எது எளிதோ அதையே உணவாகக் கொள்ள வேண்டும். மோர், கொழுப்பில்லாத தயிர், நீர் சத்து நிறைந்த பழங்கள் இவற்றினை உட்கொள்ள வேண்டும்.

* அதிக சில்லிட்ட பானங்கள் சரியானதல்ல.

* இறுக்கமான ஷீ, செருப்புகளை அணியக்கூடாது.

* புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.

டாக்டர் கமலி ஸ்ரீபால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசிலீக்கிற்கு பின் சுசியை காட்டி கார்த்திக் இன்று வெளியிட்ட வீடியோ..!!
Next post அன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை?..!!