ஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான 6 எளிய வழிகள்..!!

Read Time:5 Minute, 8 Second

ஒரே-இரவில்-உங்கள்-முகத்தை-பளபளக்க-வைப்பதற்கான-6-எளிய-வழிகள்யாருக்கு தான் பளபளக்கும் தோல் பிடிக்காது? சரியான தூக்கம், வழக்கமான சி.டி.எம், சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி, சரியான புத்துயிர் கிரீம்கள் போன்றவையே இதன் முக்கிய மந்திரங்கள் ஆகும். இதனை சரியாக பின்பற்றுவது பலருக்கு சாத்தியமில்லை. ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க… நீங்கள் குறுகிய நேரத்தில் பளபளக்கும் சருமம் பெற விரும்பினால், இங்கு உள்ள பரிசோதிக்கப்பட்ட இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

அரிசி மற்றும் எள் ஸ்கரப் சம அளவு எள் மற்றும் அரிசியை இரவில் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனை உங்கள் உடல் மற்றும் முகத்தில் பூசிக் கொண்டு ஓரிரு நிமிடங்களில் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்வதால், சருமத்தில் வறட்சி ஏற்படுவது குறைவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.

ஸ்லீப்பிங் பேக்ஸ் பயன்படுத்தவும் இது நீங்கள் உறங்கும் வேளையில் உங்களுக்கு ஊட்டம் அளிக்கும். உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொண்டு குளிர்ந்த நீரால் அலசவும். உங்கள் மேக்கப் அனைத்தையும் அகற்றவும். 2 தேக்கரண்டி ஸ்லீப்பிங் பேக்கை எடுத்துக் கொண்டு, அதனை முகத்தில் மேல் நோக்கியவாறு நன்றாக மசாஜ் செய்யவும். இது எளிதாக சருமத்தினால் உறிஞ்சப்படுவதால் பிசுபிசுப்பான உணர்வு தோன்றாது. காலையில் எழுந்த பின் நல்ல சுத்தப்படுத்திக் கொண்டு, முகத்தை சுத்தம் செய்து கொண்டு, பின் குளிர்ந்த நீரால் அலசவும்.

பால் பயன்படுத்தவும் சருமத்திற்கு பளபளப்பு தரும் ஒரு இயற்கையான அற்புதமான பொருள் பால். குறைந்த கொழுப்பு கொண்ட பாலை, உங்கள் சருமம் உள்வாங்கும் வரை மென்மையாக உங்கள் முகத்தில் மேல் நோக்கி தடவவும். பிறகு முகம் கழுவி உலர விடவும். பாலானது கரும்புள்ளிகளை நீக்க மட்டுமின்றி, உங்கள் முகத்திற்கு ஊட்டம் அளிக்கின்றது.

ஸ்கரப் மற்றும் மாய்ஸ்சுரைசர் இரவில் படுக்கும் முன் முகத்தில் உள்ள மேக்கப்புகளை ரோஸ் வாட்டர் கொண்டு நீக்கவும். பின் தேன் மற்றும் மூல்தானி மெட்டி கலந்து முகத்தில் 15 நிமிடங்கள் உலர விடவும். பின் சிறிது தண்ணீர் கொண்டு மென்மையாக இரண்டு நிமிடம் நன்றாக ஸ்கரப் (மசாஜ்) செய்து குளிர்ந்த நீரில் அலசவும். பின் நைட் க்ரீம்மை முகத்தில் தடவி மாய்ஸ்சுரைசஸ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கண்களுக்கு… நீங்கள் முகத்தை ஒளிர வைக்கும் போது, கண்களை மறந்துவிடாதீர்கள். தூக்கமின்மை மற்றும் அதிக நேரம் கணினியை உபயோகித்தல் போன்றவற்றால் கண்ணில் கருவளையம் தோன்றலாம். ஆரோக்கியமான கண்களைப் பெற இந்த எளிய முறைகளை பின்பற்றவும். அதற்கு தூங்கும் போது கண் மாஸ்க் பயன்படுத்தவும் அல்லது விளக்கெண்ணெய் தடவவும் மற்றும் தூங்கி எழுந்தவுடன் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவவும். இவற்றை செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையாவிட்டாலும் கூட, உங்கள் கண்கள் ப்ரெஷ்ஷாகத் தெரியும்.

எண்ணெய்கள் குளிர்காலங்களில் முகத்தில் ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துவது முகத்திற்கு ஊட்டம் அளிக்கும். வறட்சியான சருமம் உள்ளவர்கள் அதனை இரவில் தடவிக் கொண்டு காலையில் கழுவினால் முகம் பிரகாசிக்கும். சாதாரண சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து மெதுவாக மசாஜ் செய்யவும். காலையில் எழுந்தவுடன் லேசான சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் செக்ஸ் ஆசைகள் எப்படி காண்பது..!!
Next post சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளம் பெண் கைது..!!