தைராய்டுக்கான அறிகுறிகளும் – பாதுகாப்பு முறைகளும்..!!

Read Time:4 Minute, 36 Second

201703291316467295_Symptoms-of-thyroid--Security-systems_SECVPFதைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை :

* தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

* மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

* இது குறித்து பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

* உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

* உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது.

* இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

டயட் :

* உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்சனை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம்.

* தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்சனைகள் தோன்றும்.

* அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்சனைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

* தைராய்டு பிரச்சனையை பொறுத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

* தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்..!!
Next post மேனேஜர் கையில் சிக்கிய நடிகையின் நிர்வாண வீடியோ..!!