எனக்கு அது என்னவென்றே தெரியாது..!!
பொலிவுட்டின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா. என்ஹெச்-10 படத்தை தொடர்ந்து அவரது தயாரிப்பில் வெளியாக இருக்கும் இரண்டாவது படம் பில்வுரி. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது…
பில்வுரி டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதுப்பற்றி உங்கள் கருத்து.?
டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னையும், தில்ஜித்தையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.
கதை, இசை உள்ளிட்ட மற்ற அம்சங்களும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது, ஆகவே டிரைலரை கொண்டாடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணம் இயக்குநர் அன்சாய் லால் தான்.
அதென்ன பில்வுரி என்ற தலைப்பு.?
பஞ்சாப்பில், பில்வுர் என்ற ஊர் உள்ளது. படத்தின் கதையும் பஞ்சாப்பில் தான் நடக்கிறது. பொதுவாக பஞ்சாப்பில் வசிப்பவர்கள் தங்களது பெயருக்கு பின்னால் ஊர் பெயரையும் சேர்த்து கொள்வார்கள்.
உதாரணத்திற்கு சாகித் லூதியான்வி என்ற பெயர் உள்ளது. இதில் பெயருக்கு பின்னால் வரும் லூதியானா என்பது அங்குள்ள ஒரு ஊர்.
இதைப்போன்று இன்னும் நிறைய உதாரணங்களை சொல்லலாம். படத்தின் கதையும் பில்வுரை சுற்றி நடப்பதால் இந்த தலைப்பை தேர்வு செய்தோம்.
இப்படத்தை தயாரிக்க என்ன காரணம்.?
நான் ஏற்கனவே என்ஹெச்-10 என்ற படத்தை தயாரித்துள்ளேன். இது வழக்கமான கதை கிடையாது, ஒரு வித்தியாசமான கதையம்சம் உள்ள படம்.
பில்வுரி படமும் அந்த ரகத்தை சேர்ந்தது தான்.
மேலும் படத்தில் ஒரு பேயும் முக்கிய ரோலில் நடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கதையே அதை சுற்றி தான் நகரும். பில்வுரி கதையை கேட்ட மாத்திரமே நான் இப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன். அதோடு, படத்தில் ரசிகர்களை கவரும் வகையிலான அனைத்து விஷயங்களும் உள்ளது.
உங்கள் கேரியரில் பாம்பே வெல்வெட் தோல்வி படம். இதில் ஏதேனும் வருத்தம் உள்ளதா…?
பாம்பே வெல்வெட் படத்தை தேர்ந்தெடுத்து நடித்தது நான் தான், ஆனால் படம் தோல்வி தழுவியது, அதனால் வருத்தம் இல்லை.
என் வாழ்க்கையில் பாம்பே வெல்வெட் முக்கியமான படம். இந்தப்படத்திற்கு பிறகு தான் என் வாழ்க்கை பெரிதாக மாறியது.
அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் நடித்த பிறகு தான் நிறைய விஷயங்களை கற்க முடிந்தது, எனக்கும் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அப்படியிருக்கையில் இப்படம் தோல்வி என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டீர்கள், இதுபற்றி உங்கள் கருத்து..?
உண்மையை சொல்கிறேன், சின்ன வயதில் கூட நான் நடிகையாக வேண்டும் என்று நினைத்தது இல்லை. நான் நடிகையாக வேண்டும் என்று கடவுள் விரும்பினார் நடந்தது.
முதன்முதலாக நான் பேண்ட் பாஜா பாரத் படத்தில் நடித்த பிறகு, என் மனதில் தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். பொலிவுட்டின் தலைசிறந்த இயக்குநர்களான கரண் ஜோகர், ஆதித்யா சோப்ரா, விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யாப், இம்தியாஸ் அலி ஆகியோரின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான்.
இன்றைக்கு அந்த கனவு எல்லாம் நிறைவேறி இருக்கிறது. ரசிகர்களும் என் படத்தை ரசிக்கிறார்கள். எல்லாவற்றையும் விட நான் என்ன வேண்டும் என்று நினைத்தேனோ, அது கிடைத்திருக்கிறது, அந்த வகையில் எனக்கு சந்தோசமே.
பல முன்னணி நடிகைகள் குத்துப்பாட்டுக்கு ஆடுகின்றனர், நீங்கள் மட்டும் ஏன் ஆடவில்லை.?
உண்மை தான் நான் இதுவரை எந்த குத்துப்பாட்டுக்கும் ஆடவில்லை. முதலில் ஒரு விஷயம் எனக்கு புரியவே இல்லை, குத்துப்பாட்டு என்றால் என்ன என்றே தெரியாது, அப்படியிருக்கையில் அதைப்பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும்.
Average Rating