ஆராய்ச்சிக்காக செயற்கை பனிச்சரிவை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்: வியக்க வைக்கும் வீடியோ..!!

Read Time:2 Minute, 5 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் செயற்கையான பனிச்சரிவை ஏற்படுத்திய காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

சுவிஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுப்பட்டு வருவார்கள்.

விளையாட்டின்போது ஏற்படும் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், சுவிஸ் நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று பனிச்சரிவு எவ்வாறு ஏற்படுகிறது? அதில் இருந்து எப்படி தப்புவது உள்ளிட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னால் பனிமலை ஒன்றில் செயற்கையான பனிச்சரிவை ஏற்படுத்தி அதனை ஆய்வு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக, மலையின் உச்சியில் ஹெலிகொப்டர் உதவியுடன் வெடிகுண்டு வீசப்பட்டது.

இந்த தாக்கத்தில் மலை முழுவது விரிசல்கள் ஏற்பட்ட பனிப்படலம் வேகமாக கீழ் நோக்கி சரிந்து விழுந்துள்ளது.

இந்த பனிச்சரிவானது சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு பயணம் செய்துள்ளது.

இந்த ஆய்வில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் யாருக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

மேலும், இக்காட்சிகளை தத்ரூபமாக வீடியோ எடுத்துள்ள விஞ்ஞானிகள் இதனை நூதனமான முறையில் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை..!!
Next post உள்ளாடை இல்லாமல் திறந்த மனது. அஜித் நாயகியின் அட்டகாசம்..!!