ஜெர்மனியில் மலைப்பாம்பு மூலம் கழுத்து மசாஜ்: வாடிக்கையாளர்கள் பரவசம்..!!

Read Time:2 Minute, 7 Second

201703201105446740_German-salon-uses-python-to-give-customers-neck-massages_SECVPFமுடி திருத்தும் கடைகளில் சிகை அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர்.

அதுவும் மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்கின்றனர். இந்த முடி திருத்தும் சலூன் கடை ஜெர்மனியில் டிரெஸ்டென் நகரில் உள்ளது.

இந்த சலூன் கடையின் உரிமையாளர் பிராங்க் டோசியன். இவர் ஒரு மலைப்பாம்பை வளர்த்து வருகிறார். அதற்கு மாண்டி என பெயரிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு முடித்திருத்தம் செய்த பிறகு இறுதியில் அவரது கழுத்தில் மாண்டி மலைப்பாம்பு சுற்றப்படுகிறது. அது தனது தசையின் மூலம் லேசாக நெளிந்தபடி கழுத்து பகுதியில் மசாஜ் செய்கிறது.

இத்தகைய மசாஜ் பணியில் மலைப்பாம்பு சுமார் 13 வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

மலைப்பாம்பு மசாஜை ஏராளமான வாடிக்கையாளர்கள் விரும்பி செய்கின்றனர். பொதுவாக தனது இரையை வேட்டையாடும் மலைப்பாம்புகள் அதை பிடித்து உடலை நெரித்து கொன்று சாப்பிடும். ஆனால் மனிதர்களை கொல்வது மிகவும் அரிது என பாம்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே மலைப்பாம்பு மசாஜ் சிகிச்சைக்கு என தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை. மசாஜ் செய்து கொள்பவர்கள் ஒரு சிறு தொகையை “மாண்டி” மலைப்பாம்புக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கள் மகள் கற்பழிக்கப்பட்டதாக எந்த பெற்றோரும் பொய் சொல்ல மாட்டார்கள்: டெல்லி ஐகோர்ட்..!!
Next post தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்..!!