செக்ஸ் தூண்டுதலால் உறவில் நாளடைவில் ஏற்படும் விபரீதங்கள்…!

Read Time:4 Minute, 1 Second

Ca3-350x209ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவிலும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வருவதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும்.

உணர்ச்சி வசப்படுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆராய்ச்சியில் ஆண்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதிக பட்சம் 30 நொடிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை.

ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால் இரு மாடுகளும் இழுக்க வேண்டும். ஒரு மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும். இருவரும் சரியாக இயங்கினால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும். மனைவியை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்.

ஃபோர் பிளே எனப்படும் உடலுறவுக்கு முந்தைய தூண்டுதல் முக்கியம். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செயல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும்.

எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடிக்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு.

ஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடுவார்கள். பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவது கடினம். அன்று அவர்கள் வருத்தப்படும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும். காலையில் மனைவியை திட்டிவிட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்திருப்பவர்கள் அதிகம். செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மனநிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்கலை. மற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலையை அறிந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மனைவி விருப்பத்தில் உள்ளாரா? இல்லையா? இதைத் தெரிந்துகொள்ள சிக்னல்கள் உதவும். மனைவிக்கு சில நேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது. தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலன் மற்றும் காதலி நடு வீதியில் செய்துள்ள காரியம்..!! (வீடியோ)
Next post அதிகமா வியர்குதா அதை தடுக்க இதோ சில வழிகள்..!!