அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

Read Time:3 Minute, 10 Second

Tennis.jpgகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும் சுவிட்சர்லாந்து நாட்டைச்சேர்ந்தவருமான ரோஜர் பெடரர், வாங்குடன் (தைபே) மோதினார்.

இதில் பெடரர் 6-4, 6-1, 6-0 என்ற நேர்செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 2-ம்நிலை வீரரான நடால் ஆஸ்திரேலிய வீரர் பிலிப்போசிசை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் பிலிப்போசிசை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் லைடன்ஹெவிட்(ஆஸ்திரே லியா) அல்பர்ட்டை (ஸ்பெயின்) 7-5, 6-4, 6-3 என்ற செட் கணக்கிலும் கார்லோஸ்மோயா (ஸ்பெ யின்) அகுஸ்டினை (அர் ஜென்டினா) 7-5, 7-6, 6-7, 6-3 என்ற கணக்கிலும் டேவிட் நல்பாண்டியன் (அர் ஜென்டிணா) மைக்கேலை (ஜெர்மனி) 4-6, 6-7, 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கிலும் தோற்கடித்தனர்.

2-வது சுற்றில் ஷர போவா பெண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 3-ம்நிலை வீராங்கனை யான மரியா ஷரபோவா, ஆலந்து வீராங்கனை மிச்செல்லாகிரஜக்டன் மோதி னார். இந்த ஆட்டத்தில் ஷரபோவா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் எளி தாக வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தல் அமெரிக்காவின் முன்னணி வீராங்கணையான செரீனா வில்லியம்ஸ், லினோவை(ஸ்பெயின்) எதிர் கொண் டார். இதில் செரீனா 6-1, 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் அமேலிமவுரஸ்மோ (பிரான்சு) கிரிஸ்டினாவை (ஜெர்மன்) 6-1, 7-5 என்ற கணக்கிலும் மேரி பியர்ஸ்( பிரான்சு), எலீனாவை (ரஷ்யா) 7-5, 6-1 என்ற கணக்கிலும் தோற்கடித்தனர். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் மகேஷ்பூபதி (இந்தியா), சேவியர் மலிசி (பெல்ஜியம்) ஜோடி லியோஸ் (செக் குடியரசு), மினகல்(ரஷ்யா) ஜோடியை எதிர்த்து ஆடியது. இதில் பூபதி ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மியான்மர் நாட்டில் 20 இந்தியர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்
Next post இராக்கில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 36 பேர் சாவு