இந்தியாவில் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்யும் புதிய முயற்சி..!!

Read Time:3 Minute, 55 Second

201703161617248067_AR-Rahman-does-it-for-the-first-time-in-India_SECVPFஇந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது.

இசையில் புதுமை வெளிகொண்டு வருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி ‘தி இஸ் இட்’ என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள ‘ஒன் ஹார்ட்’ இசைத் திரைப்படம் பிப்ரவரி 5-ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. ‘ஒன் ஹார்ட்’ இசை படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர்.

‘ஒன் ஹார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத் திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

திரையுலகில் தனது 25ம் ஆண்டில் அடியேடுத்து வைப்பதின் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். வெகுநாட்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை துறையை சார்ந்தவர்களுக்கு உதவிட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.

‘ஒன் ஹார்ட் முயுசிஷியன்ஸ் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ அமைப்பு இசைத்துறை சேர்ந்தவர்களுக்கு உதவி புரிய தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ‘ஒன் ஹார்ட்’ படம் முலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இசைத்துறையினருக்கு ‘ஒன் ஹார்ட் முயுசிக் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் நலத்திட்ட உதவிகள் புரிய அன்பளிப்பாக அளிக்கின்றார்.

ஜீமா (GIMA – GLOBAL INDIAN MUSIC ACADEMY AWARDS) நிறுவனம் ஒன் ஹார்ட் முயுசிஷியன்ஸ் பவுண்டேஷனை நிர்வாகித்து நலத்திட்ட உதவிகளை முன்னின்று இயக்கவுள்ளது. இதன் மூலம் தனது நீண்ட கால கனவை ஏ.ஆர்.ரகுமான் நிறைவேற்றவுள்ளார். உலகெங்கும் ஏப்ரல் மாதம் ‘ஒன் ஹார்ட்’ இசைத்திரைப்படம் வெளியாகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்கு..!!
Next post கூந்தல் உதிர்வை தடுக்கும் பழங்களால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்..!!