சளியால் மூக்கு ஓரமா காயமாகி இருக்கா அதைப் போக்க இதோ சில வழிகள்..!!
தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், பலருக்கும் சளி பிடித்து அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சளி பிடித்தால், உடலில் உள்ள ஆற்றல் குறைவதோடு, மூக்கு ஒழுகுவதால் மூக்கின் ஓரங்களில் வறட்சியும், காயங்களும் ஏற்படும். ஆகவே சளி பிரச்சனையில் இருந்து விடுபடவும், அழகு பாழாகாமல் இருக்கவும் ஒருசில எளிய வழிகளைத் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் நிறைந்த ஒரு மாய்ஸ்சுரைசர். இதனை மூக்கின் ஓரங்களில் தடவினால், சளியினால் ஏற்படும் வெடிப்புக்கள் மற்றும் வறட்சி நீங்கும்.
ஆலிவ் ஆயில் சளியினால் மூக்கின் ஓரங்களில் வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களை மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். அதற்கு கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துங்கள்.
சோப்புக்கள்/சுடுநீர் வேண்டாம் சளி பிடித்தால், பலரும் குடிக்கவும் சரி, முகத்தைக் கழுவவும் சரி சுடுநீரைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் மிகவும் சூடான நீருடன், சோப்புக்களைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள எண்ணெய் முழுமையாக நீக்கப்பட்டு, வறட்சி இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். ஆகவே இந்த தவறைச் செய்யாதீர்கள்.
மூக்கை அதிகம் தேய்க்காதீர்கள் சளி பிடித்திருக்கும் போது, துணியால் கடுமையாக மூக்கைத் துடைக்கவோ, தேய்க்கவோ செய்யாதீர்கள். இதனால் அவ்விடத்தில் காயங்கள் தான் அதிகரிக்கும்.
யூகலிப்டஸ் ஆயில் வைட்டமின் ஈ எண்ணெயை யூகலிப்டஸ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவினால், மூக்கைச் சுற்றி ஏற்படும் வறட்சி தடுக்கப்படுவதோடு, யூகலிப்டஸ் எண்ணெய் சளியில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating