கார உணவுகள் உடலுக்கு நல்லதா?..!!

Read Time:2 Minute, 27 Second

201703141344152363_Spicy-foods-are-good-for-the-body_SECVPFகார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை நன்கு சுரக்கச் செய்கிறது.

குடை மிளகாய் என்பது, வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு. இருப்பினும், நாம் உணவோடு சேர்த்து உண்ணும், சாதாரண பச்சை மிளகாயை, சாதாரணமாக விட்டுவிட முடியாது.

பச்சை மிளகாயில் விட்டமின் “சி’ அதிகமாக உள்ளது. இது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும். பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் “ஈ’ சத்து, சருமத்தில் எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிகிறது.

அதனால் காரமான உணவை உண்பதன் மூலம், நல்ல சருமத்தை பெற முடியும். மிளகாயில் கலோரிகள் இல்லை, அதனால், உடல் எடையை குறைக்க, டயட்டில் இருக்கும் போது கூட, மிளகாயை பயன்படுத்தலாம்.

பச்சை மிளகாயை உண்பதால், புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சம நிலையில் வைக்க உதவும். உணவு செரிமானத்தை வேகப்படுத்தும் பச்சை மிளகாயில், நார் சத்துக்கள் உள்ளன, இதனால், உணவு செரிமானம் வேகமாக நடக்கும்.

மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்பின்ஸை உற்பத்தி செய்யும்,இது, மனநிலையை நன்றாக வைத்திருக்கும். பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.

பாக்டீரியா தொற்று வராமல் காக்கும் பச்சை மிளகாயில், ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளன. இந்த குணத்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்போதைக்கு திருமணம் இல்லை: அஞ்சலி திட்டவட்டம்..!!
Next post ஐ.நா நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம்? – திடுக்கிடும் உண்மைத் தகவல்..!!