மியான்மர் நாட்டில் 20 இந்தியர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்

Read Time:1 Minute, 27 Second

Miyanmar.Flag.jpgமணிப்பூர் மாநிலத்தில் இருந்து 21 பேர் எல்லையை தாண்டி கடந்த மே மாதம் மியான்மார் நாட்டுக்கு சென்றனர். அங்குள்ள தாங்காஸ் பகுதிக்கு சென்ற அவர்கள் மரங்களை வெட்டி லாரியில் கடத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மியான்மார் போலீசார் கைது செய்தனர். பிடிபட்டவர்களில் ஒருவர் 6 வயது சிறுவன்.

அனுமதி இன்றி எல்லையை தாண்டியதாகவும் வேட்டையாடியதாகவும் மரங்களை வெட்டி கடத்திய தாகவும் அவர்கள் மீது மியான்மர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அவர்கள் மீது விசாரணை நடத்திய கோர்ட்டு சிறுவனை மட்டும் விடுதலை செய்தது.மற்ற 20 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது எந்த விசாரணையும் இன்றி மியான்மார் அரசு காவலில் வைத்திருந்தது பற்றி இந்தியா கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவசரம் அவசரமாக மியான்மார் அரசு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ, பிரதமரிடம் மனு
Next post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி