10 வரு­டங்­க­ளாக பாலியல் உறவில் ஈடு­பட மறுத்­ததால் கண­வரின் ஆணு­றுப்பை வெட்டித் துண்­டாக்­கிய மனைவி..!!

Read Time:3 Minute, 2 Second

ertretதனது கணவன் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட மறுத்­ததால் கண­வனின் ஆணு­றுப்பை மனைவி வெட்டி துண்­டாக்­கிய சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

உத்­தர பிர­தேச மாநி­லத்தின் காஸி­யாபாத் மாவட்­டத்தைச் சேர்ந்த ரீட்டா யாதவ் எனும் பெண்ணே கண­வரின் ஆணுறுப்பை துண்­டித்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தற்­போது 28 வய­தான ரீட்டா யாத­வுக்கும் பிரகாஷ் யாதவுக்கும் 11 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் நடை­பெற்­றது.

கடந்த 10 வரு­ட­கா­ல­மாக தன்­னுடன் தனது கணவன் பாலியல் உறவில் ஈடு­பட மறுத்­ததால் தான் ஆத்திர­ம­டைந்­த­தாக ரீட்டா யாதவ் தெரி­வித்­துள்ளார்.

கல்­லா­லான ஆட்­டுக்கல் ஒன்­றினால் பிரகாஷ் யாதவை ரீட்டா யாதவ் தாக்­கி­ய­தா­கவும், அவர் மயங்கி வீழ்ந்த நிலையில், அவரின் ஆணு­றுப்பை கத்­தியால் வெட்­டித் துண்­டித்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் பொலி­ஸா­ரிடம் ரீட்டா யாதவ் சர­ண­டைந்தார். நண்­பர்­களின் உத­வி­யுடன் பிரகாஷ் யாதவ் அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

அவ­ருக்கு டாக்டர் சௌரப் குப்தா தலை­மை­யி­லான மருத்­து­வர்கள் 5 மணித்­தி­யா­லங்கள் சத்­தி­ர­சி­கிச்சை செய்­ததன் மூலம், ஆணு­றுப்பை மீளப் பொருத்­தினர்.

தற்­போது பிரகாஷ் யாதவ் ஆபத்­தான கட்­டத்தைக் கடந்­து­விட்டார் என மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, ரீட்டா யாதவ் இது தொடர்­பாக கூறு­கையில், “என்னை வெறுப்­ப­தாக எனது கணவர் என்னிடமே கூறுவார்.

எனது முகத்தை பார்ப்­ப­தற்­குத்தான் விரும்ப­வில்லை எனவும் அவர் கூறுவார்.

தினமும் எமக்­கி­டையில் சண்டை ஏற்­படும். வேறொரு பெண்­ணுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­போ­வ­தாக அவர் என்­னை­அச்­சு­றுத்தி வந்தார்.

எனக்கு பிள்­ளை­களைப் பெற வேண்டும் என்ற ஆசை இருந்­தது. இதற்­காக அவ­ரிடம் நான் கெஞ்­சினேன். ஆனால், அவர் என்னைத் தவிர வேறு யாருடனாவது பாலியல் உறவில் ஈடுபடப் போவதாக கூறினார்.

பல வருடங்களாக அவரிடம் நான் சித்திரவதையை அனுபவித்தேன்” எனக் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் அதிசய மனிதர்கள்..!! (வீடியோ)
Next post வீதி அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் மருதங்கேணி..!! (கட்டுரை)