பருவமடைதல் என்பதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்..!!
பருவமடைதல் என்பது இளம் பருவத்தினர் இனப்பெருக்கம் செய்வதற்கான திறனை அடைந்த பெரியவர்களாக பாலியல் முதிர்வு அடையும் நிலை ஆகும். பருவமடைதல் பல்வேறு உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் சார்ந்ததாகும். இந்நிலையில் பாலியல் சார்ந்த இரண்டாம் நிலை ஹார்மோன்கள் வளர்ச்சி அடைகின்றன.
பருவமடையும் போது தொடர் ஹார்மோன் மாற்றங்களினால் தூண்டல் ஏற்படுகிறது. பின்னர் பருவமடைந்ததற்கான சமிக்ஞைகள் மூளையில் இருந்து பிட்யூட்டரி சுரப்பிக்கும் பருவமடைந்ததற்கான மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜனுக்கும் அனுப்பப்படுகின்றன. பருவமடைந்ததற்கான மாற்றங்கள் 4 முதல் 5 ஆண்டுகள் வரை உடலில் ஏற்படும். பருவமடைதல் சிறுவர்களைக் காட்டிலும் சிறுமிகளுக்கு முன்பே துவங்குகிறது. பருவமடைந்ததற்கான முதல் மாற்றங்கள் 10 முதல் 13 வயதிற்குள் கவனிக்கத்தகுந்த வகையில் இருக்கும்.
சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பருவமடைவதால் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்கள்:
தங்களது உருவத்தின் மீதான அதிருப்தி.
சுய-மரியாதை உணர்வு குறைதல்.
மனம் அலைபாய்தல்.
அதிகார தொனியிலான நடத்தை.
பாலியல் தேவைகள் அபிவிருத்தி அடைதல்.
சிறுவர்களுக்கு பருவமடைவதால் ஏற்படும் மாற்றங்கள்
பிறப்புறுப்புகளில் மாற்றங்கள்
சிறுவர்களுக்கு ஏற்படும் ஆரம்ப மாற்றங்களில் ஒன்று அவர்களின் விதைகள் பெரிதாகத் துவங்குவதுடன் விதைப்பை மெல்லியதாகவும் சிவப்பு நிறத்திலும் மாறத்துவங்கும்.
ஆண்குறியின் அடிப்பகுதியில் அந்தரங்க முடிகள் வளரத் துவங்கும்.
ஆண்குறி பெரிதாக வளர ஆரம்பிப்பதுடன் விதைப்பையின் தோல் மெதுவாக இருண்ட நிறத்தை அடையத் துவங்கும்.
அந்தரங்க முடிகள் தடிமனாகவும் சுருண்டும் வளரும்.
தோலில் ஏற்படும் மாற்றங்கள்:
முகத்தில் முடிகள் (மீசை மற்றும் தாடி) தோன்றத் துவங்கும்.
கை அக்குலில் முடிகள் வளரத்துவங்கும்.
சிறுவர்களுக்கு அதிகம் வியர்க்கும்.
சில சிறுவர்களுக்கு பருக்கள் (முகப்பரு) வரத் துவங்கும். பெரும்பாலும் முகத்தில் காணப்படும் இவை வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் என அழைக்கப்படும் சீழ் நிரம்பிய புள்ளிகள் முதலிய புள்ளிகளாக தோற்றமளிக்கும்.
குரல் மாற்றங்கள்
குரல் “உடையும்” அல்லது “விரிசலடையும்”. மேலும் ஆழ்ந்த (குறைந்த சத்தத்தை) ஒலியைப் பெறத் துவங்கும். ஆரம்ப கட்டத்தில் குரலைக் கட்டுப்படுத்த சிரமம் இருக்கலாம்.
விறைப்பு மற்றும் பாலுணர்வுக் கனவுகள்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பின் காரணமாக, சிறுவர்கள் அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் கூட விறைப்புத் தன்மை ஏற்படக்கூடும்.
சில சிறுவர்களுக்கு அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது (பாலுணர்வுக் கனவுகள் காரணமாக) விந்து வெளியேறலாம்.
மனநிலை மாற்றங்கள்
சிறுவர்களுக்கு இந்தப் பருவத்தில் விவரிக்க இயலாத வகையில் மனம் அலை பாயும், ஆக்ரோசமடையும். இது வழக்கமாக குறிப்பிட்ட காலத்தில் சாதாரண நிலை அடையும்.
திடீர் வளர்ச்சி
பருவமடையும் போது உடலில் திடீர் வளர்ச்சி ஏற்படும். உடல் பெரிதாக வளரும், அதிக தசைகள் உருவாகும்.
சிறுமிகளுக்கு பருவமடைவதால் ஏற்படும் மாற்றங்கள்
மார்பக மாற்றங்கள்
சிறுமிகளுக்கு பருவமடைவதால் ஏற்படும் முதல் மாற்றம் அவர்களது மார்பகங்கள் வளர்ச்சி அடையத் துவங்கும்.
சில நேரங்களில், இந்த வளர்ச்சியின் போது ஒரு மார்பகத்தில் அல்லது இரண்டு மார்பகங்களிலும் லேசான வலி இருக்கலாம்.
படிப்படியாக, இரண்டு மார்பகங்களும் வளர்ச்சியடைந்து அளவில் பெரிதாகி பந்து போன்ற தோற்றத்தை அடையும்.
பிறப்புறுப்பு மாற்றங்கள்
அந்தரங்க முடிகள் வளர தொடங்குகின்றன.
மெதுவாக இந்த அந்தரங்க முடிகள் கரடுமுரடாகவும் சுருண்டும் வளரும்.
அந்தரங்க பகுதியை சுற்றி உள்ள தோல் தடிமன் அதிகரிப்பதால் இருண்ட நிறத்தை அடையலாம்.
ஈஸ்ட்ரோஜன் சுரப்பின் காரணமாகவும் யோனியின் உள்பகுதி பிஎச் அமிலத்தன்மை ஆவதாலும், யோனியின் உள்பகுதி அடுக்கு (சிவப்பு நிறத்தில் இருந்து) இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
ஈஸ்ட்ரோஜன் சுரப்பின் காரணமாக யோனியில் வெள்ளை நிற திரவம் சுரக்கலாம்.
பருவமடையத் துவங்கியதன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிறுமிகளுக்கு அவர்களது முதல் மாதவிடாய் பருவம் துவங்கும்.
தோல் மாற்றங்கள்
சில சிறுமிகளுக்கும் கூட அவர்களது கை அக்குல்களில் மற்றும் கால்களில் முடி வளர்ச்சி ஏற்படலாம்.
கை அக்குல் முடிகள் வளரத் துவங்கும்.
அவர்களுக்கு அதிகம் வியர்க்கத் துவங்கும்.\]
சில சிறுமிகளுக்கு பருக்கள் (முகப்பரு) வரத் துவங்கும். பெரும்பாலும் முகத்தில் காணப்படும் இவை வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் என அழைக்கப்படும் சீழ் நிரம்பிய புள்ளிகள் முதலிய புள்ளிகளாக தோற்றமளிக்கும்.
திடீர் வளர்ச்சி
பருவமடையும் போது உடலில் திடீர் வளர்ச்சி ஏற்படும்.
பெரும்பாலான சிறுமிகளுக்கு எடை கூடுவதுடன் கையின் மேல் பகுதி, மேல் முதுகு, தொடைகள் மற்றும் பிட்டங்களில் கொழுப்பும் அதிகரிக்கும்.
இடுப்பும் இடுப்புக்கூடும் அடிமடியுடன் ஒப்பிடும்போது விரிந்து காணப்படும்.
பருவமடைதலில் இறுதியில் வழக்கமான பெண் உடல் வடிவம் உருவாகிறது.
Average Rating