உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள்….!!
காலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெறுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லாசமாக இருந்தால் எப்படி இருக்கும். கேட்கவே ஜாலியா இருக்குல்ல. தொடர்ந்து படியுங்கள்…
காலையில் வைத்துக் கொள்ளும் உறவு உங்களது அன்றைய நாளை மிக சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிறதாம்.
காலை உறவில் ஈடுபட முடிவு செய்துவிட்டால் அதற்காக சில ஆயத்தங்களையும் செய்து கொள்ளத்தவறாதீர்கள். அதுதொடர்பான டிப்ஸ் இதோ…
முதல் நாள் இரவே உங்களது பற்களை நன்றாக துலக்கி விடுங்கள். பிறகு உங்களது படுக்கைக்குப் பக்கத்திலேயே மின்ட் போன்ற வாய்ச்சுத்தம் தரும் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். எழுந்திருக்கும் போது அதை போட்டுக் கொள்ள உதவும். வாய் நாறினால் உறவும் நாறிப் போய் விடுமே…
காலையில் உடலும், மனதும் படுபளிச்சென இருக்கும். எனவே புதிய புதிய விஷயங்களை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க காலைதான் சரியான சமயமாம். எனவே வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்கலாம்.
எழுந்ததுமே இருவரும் சில நிமிடங்களைத் தழுவுதலுக்காக ஒதுக்குங்கள். பின்பு மெல்ல மெல்ல உடைகளைக் களையுங்கள்.
புதிய பொசிஷன்களை காலையில் செய்து பார்க்கலாம். ஸ்பூனிங் பொசிஷன் ரொம்ப எளிதானது. எனவே அதை காலையில் செய்து பார்க்கலாம்.
உறவை முடித்ததும், குளிக்கச்செல்லும் போது சேர்ந்தேபோகலாம். இருவரும் சேர்ந்து குளிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. உடல்கள் நீரில் இணைந்து பிணையும்போது மனதுக்குள் ஏற்படும் சுகம் சொல்லில் வடிக்க முடியாததாக இருக்கும். இருவருக்கும் இடையிலான பாசப்ப பிணப்பை அது கூட்டித் தரும்.
காலையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது நமது உடலிலிருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் என்ற வேதிப்பொருள் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறதாம்.
அதுமட்டுமல்லாமல் காலையிலேயே சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதால் அன்றைய நாள் முழுவதும் அந்த சுறுசுறுப்பு நம்முடனேயே இருக்குமாம். மேலும் காலையில் நடந்ததை நினைத்து நினைத்து மனதும் கூட உற்சாகமாக இருக்குமாம்.
வாரத்திற்கு 3 முறையாவது காலையில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜி ஸ்ட்டுகள். அப்படியானால் மற்ற நாட்களில் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. மற்ற நாட்களில் இரவுக்கு மாறி விடுங்கள். வாரத்தில் 7 நாட்களும் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பே இல்லை!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating