ஆண்களே! கட்டிலில் இதெல்லாம் மிஸ் பண்ணி சொதப்பிடாதீங்க… ஜமாய்க்க கத்துக்கோங்க…!!
தவறு என்பது இயற்கையாக நிகழக்கூடிய விஷயம் தான். யாரும் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. அது படுக்ககையறை சமாச்சாரங்களாக இருந்தாலும் அப்படித்தான். யாராவது தெரிந்தே அந்த விஷயங்களில் தவறு செய்வார்களா?
எல்லா ஆண்களும் உடலுறவு விஷயத்தில் பொதுவாக செய்யும் தவறுகள் சில உண்டு. அவற்றை என்னவென்று அறிந்து கொண்டாலே அதுபோன்ற தவறுகள் நிகழாமல் கட்டிலில் உங்களால் ஜமாய்க்க முடியும்.
பெரும்பாலான ஆண்களுக்கு படுக்கையில் இருக்கும் பொழுது பெண்களிடம் எப்படி பேச வேண்டுமென்று தெரிவதே இல்லை. மற்ற நேரங்களில் பேசுவது போன்றே படுக்கையிலும் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். படுக்கையறையில் உங்களது மென்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள். வன்மையாக நடந்து கொள்ளாதீர்கள்.
சில ஆண்கள் உடலுறவு கொள்ளும் நேரத்தில் பேசுவதையே தவிர்த்துவிடுவார்கள். அது முற்றிலும் தவறு. உங்களுடைய இதமான அன்பான வார்த்தைகள் உங்கள் துணையை சௌகரியமாக இருக்கச் செய்யும். இல்லாவிடில் அவர்கள் இயல்பாக உங்களிடம் உறவு கொள்ள யோசிப்பார்கள்.
அதனால் படுக்கையறையில் இருக்கும்பொழுது அவர்கள் செய்யும் செயலை பாராட்டுங்கள். அவர்களுக்குத் தெரியாததை சொல்லிக் கொடுங்கள். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கற்றுக் கொடுக்கும் போது தான் இருவரும் உறவில் சுகம் காண முடியும்.
முத்தம் கொடுப்பது மிக முக்கயமான ஒரு விஷயம். சிலர் உடலுறவின் போது நேரடியாக உறவில் ஈடுபடத் துவங்கிவிடுவதுண்டு. ஆனால் உடலுறவில் அவ்வப்போது கொடுக்கும் முத்தங்கள் தான் இன்னும் அதிக கிளர்ச்சியைத் தூண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இது இருவருக்குமிடையேயான உறவில் பாலமிடும்.
உடலுறவின் போது ஆண்கள் தங்களுடைய ஆர்வம், வேகம் மற்றும் குறும்புத் தனத்தால் என்ன செய்கிறோம் என்பதையே மறந்துவிடுவார்கள். அப்படி மறந்து செய்யும் செயல்களில் ஒன்று தான் தன்னுடைய ஒட்டுமொத்த எடையையும் பெண்ணின் மீது இறக்கிவிடுவது. அப்போது அவர்களால் மூச்சு கூட விடமுடியாமல் மிகவும் அசௌகரியப்படுவார்கள்.
பெண்களில் சிலர் உடலுறவுக்கு முன் ஆண்களைக் கடித்து சீண்டிக் கொண்டே இருப்பார்கள். அப்படி செய்தால் அவர்கள் உங்களுடன் கட்டில் விளையாட்டுக்கு ஆயத்தமாகி விட்டார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தைப் புரிந்து கொள்ளாமல் மிஸ் பண்ணிடாதீங்க…
இவையெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் சொதப்பாமல் கவனமான இருந்தால் உங்களுக்குப் பேரின்பம் கிட்டுவது உறுதி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating