ரஜினியின் வில்லனுக்கு ரூ.29 லட்சம் அபராதம்..!!

Read Time:1 Minute, 52 Second

201702171056525209_fine-of-Rs-29-lakh-for-Rajinis-Villain-actor-danny_SECVPFநாட்டிலேயே மும்பையில் சாலை வரி அதிகமாகும். இங்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 20 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது. எனவே பலர் சாலை வரி 2 முதல் 2½ சதவீதம் மட்டும் விதிக்கப்படும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அல்லது புதுச்சேரி, டையு-டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி மும்பையில் பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும்.

இதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் ஓட்டப்பட்டு வரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் சட்ட விரோதமாக ஓட்டப்பட்டு வந்த 451 சொகுசு வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கார்கள் சுமார் ரூ.10 கோடி வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

பிடிபட்டதில் பிரபல நடிகர் டேனியின் சொகுசு காரும் அடங்கும். அவருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்தனர்.

தமிழில் வெளியான எந்திரன் படத்தில் டேனி, வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொடல் அழகி செய்த காரியத்தால் கடும் சர்ச்சை..!! பதறவைக்கும் காணொளி
Next post நிர்வாணமாக நின்ற டொனால்டு டிரம்ப்! உடன் இருந்தது யார் தெரியுமா?..!!