வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள்..!!
பெண்களின் யோனியில் இருந்து அசாதாரணமாக, துர்நாற்றம் வீசும் வெள்ளை நிற திரவத்துடன், உடல் வலி மற்றும் யோனியில் எரிச்சல் ஏற்படும் நிலையை வெள்ளைப்படுதல் பிரச்சனை என்று அழைப்பார்கள். இப்பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிப்பார்கள்.
ஆனால் இந்த வெள்ளைப்படுதல் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் இனப்பெருக்க உறுப்பே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். வெள்ளைப்படுதல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அவையாவன: ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவை. இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் ஒருசில தீர்வுகள் உள்ளன. இங்கு அந்த ஆயுர்வேத தீர்வுகள் பற்றி தான் கொடுக்கப்பட்டுள்ளது.
அமரந்த் அமரந்த் என்னும் கீரை வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கீரையில் ஆன்டி-பயாடிக் பொருட்கள் அதிகம் உள்ளதால், இது வெள்ளைப்படுதலை சரிசெய்வதோடு, இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பயன்படுத்தும் முறை அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும்.
இப்படி செய்வதால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் நெல்லிக்காய். அதில் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் நெல்லிக்காய் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் உடலில் உள்ள கபத்தைக் குறைக்க உதவுகிறது. பயன்படுத்தும் முறை உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
இல்லாவிட்டால், நெல்லிக்காய் பொடியை தேன் சேர்த்து கலந்து தினமும் இருவேளை எடுத்து வரலாம். வெந்தயம் வெந்தம் கூட பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். வாழைப்பழம் வாழைப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம் மட்டும் இல்லை, வெள்ளைப்படுதலுக்கும் இது ஓர் நல்ல நிவாரணியாகும்.
பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், வெள்ளைப்படுதலில் இருந்து விடுபடலாம். வேண்டுமானால் வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். வெண்டைக்காய் ஒரு வெண்டைக்காயை துண்டுகளாக்கி, அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் வடிகட்டி வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும் பெண்கள் குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பழுத்த மாம்பழத் தோல் மாம்பழம் நன்கு சுவையாக இருப்பதோடு, அது பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யவும் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நன்கு பழுத்த மாம்பழத்தின் தோலில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. மாம்பழத்தின் தோலை அரைத்து அதனை யோனியில் தடவி வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதை நன்கு காணலாம்.
Average Rating