அடிக்கடி சளி காய்ச்சல் வராமல் இருக்க..!!

Read Time:3 Minute, 36 Second

health-winder-28இங்கு வீட்டில் அடிக்கடி தவறாமல் சுத்தம் செய்ய வேண்டிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவஸ்தைப்படுவதற்கு மோசமான சுகாதாரமும், சுற்றுச்சூழலும் தான் முக்கிய காரணம். குறிப்பாக நம் வீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருட்களில் கிருமிகள் மற்றும் தூசிகள் ஏராளமான அளவில் தேங்கியிருக்கும். வீட்டை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்துவிடுவேன் என்று பலரும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அப்படி ஒரு வாரம் கூட தாங்காத அளவில் வீட்டில் உள்ள சில மோசமான பொருட்களைத் தான் கீழே பட்டியலிட்டுள்ளோம். அவற்றை வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!

கிச்சன் துணிகள்
வீட்டிலேயே சமையலறையில் உள்ள துணியில் தான் ஏராளமான கிருமிகள் தேங்கியிருக்கும். ஏனெனில் அது எப்போதுமே ஈரமாக இருப்பதால், கிருமிகள் அதில் அதிகமாக பெருகியிருக்கும். எனவே அடிக்கடி கிச்சனில் பயன்படுத்தும் துணிகளை மாற்ற வேண்டியது அவசியம்.

பாத்ரூம் மேட்
பாத்ரூம் அருகே இருக்கும் மேட் எப்போதும் ஈரமாக இருப்பதால், அதில் பூஞ்சைகள் வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். எனவே பாத்ரூம் மேட்டை அன்றாடம் துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டியது அவசியம்.

திரைச்சீலைகள்
ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் அதை வாரத்திற்கு ஒருமுறையாவது துவைத்துவிட வேண்டியது அவசியம். ஏனெனில் அதில் தூசிகள் ஏராளமாக இருப்பதால், அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஷோபா
வீட்டில் உள்ள சோபாவை தினமும் துணியைக் கொண்டு துடைத்தால் மட்டும் போதாது, வேக்யூம் க்ளீனர் கொண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இதனால் ஷோபாவில் உள்ள தூசிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சுத்தமாக இருக்கும். மேலும் ஷோபாவில் உள்ள உறைகளை அடிக்கடி துவைத்து மாற்ற வேண்டியதும் அவசியம்.

வாசலில் போடும் மேட்
வாசலில் போடப்பட்டிருக்கும் மேட் தான் இருப்பதிலேயே தூசிகள் அதிகம் நிறைந்த மோசமான பொருள். எனவே வாசலில் போடப்பட்டிருக்கும் மேட்டை அவ்வப்போது துவைத்து, வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டியது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்..!!
Next post இப்படியும் மீன் பிடிக்கலாமா?..!! (அசத்தல் வீடியோ)