ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா..!!

Read Time:3 Minute, 54 Second

15-1484462168-trisha-dogஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக உள்ள திரிஷாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மீம்ஸ்கள், போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாடினர். 9ஆனால் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என திரிஷா குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே மீண்டும் பிரச்சனை வெடித்தது. இந்நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார். இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா முக்கிய உறுப்பினராக உள்ளார். பெரும்பாலான முக்கிய நடிகர், நடிகைகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். திரிஷாவுக்கு எதிராக பதிவு தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்காதது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீட்டா அமைப்பின் உறுப்பினராக திரிஷா இருப்பதால் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர். படப்பிடிப்பு ரத்து சிவகங்கை பகுதியில், த்ரிஷா நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. திரிஷாவின் புகைப்படத்தை பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் பரப்பி அவர் எச்ஐவி தாக்கி இறந்துவிட்டதாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெட்கப்பட வேண்டும் இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த திரிஷா, நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. தற்போது நான் என் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். பெண்களை அவமரியாதை செய்வதுதான் தமிழர்களின் கலாச்சாரமா,தமிழ் கலாச்சாரம் பற்றி பேச வெட்கபடவேண்டும் என்று கூறியிருந்தார். டுவிட்டர் பக்கம் முடக்கம் இந்நிலையில் நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தை, மர்மநபர்கள் யாரோ முடக்கியதாகவும், அதில் திரிஷாவை போல கருத்துகளை பரப்பியதாகவும் தெரிவித்திருந்தார். வெளியேறிய திரிஷா இந்நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார். இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிபியாவில் கடலில் மூழ்கிய படகு : 100 அகதிகள் பலி..!!
Next post பவானிசாகரில் போலீஸ் நிலையம் பின்புறம் பெண் பிணம் கற்பழித்து கொலையா?..!!