விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்
இலங்கையின் வடக்கே முகமாலை பகுதியில் இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல் ஒன்றில் 6 படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் இராணுவ ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல்களையடுத்து முகமாலை பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகவும் அப்பகுதியில் வீதிச்சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருப்பதாகவும் இராணுவ ஊடகத் தகவல் மையம் அறிவித்துள்ளது.
இதனிடையில் நேற்று கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் உயர் மட்டக் குழுவினரைச் சந்தித்து உரையாடிய போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விலகிச் செல்லும் தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன் விடுத்த வேண்டுகோளையடுத்து விடுதலைப் புலிகள் தமது பாதுகாப்பில் வைத்திருந்த இலங்கை அரசின் பொலிஸ் அதிகாரியான போபிட்டிகொட என்பவரை இன்று விடுதலை செய்துள்ளனர்.
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளையேற்ற தமது தலைமைப்பீடம் மனிதாபிமான அடிப்படையில் அந்த பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனால் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் இன்று காலை கையளிக்கப்பட்ட இந்த பொலிஸ் அதிகாரியை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் வவுனியாவுக்கு அழைத்து வந்து அங்குள்ள பொலிஸ் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உடனடியாகவே அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை சுமார் இரண்டு வார காலத்தின் பின்னர் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திற்கும் 45 ட்ரக் வண்டிகளில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிவில் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ் குடாநாட்டில் முகாமாலை பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட மோதல்களையடுத்து, ஏ9 வீதி முழுமையாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பொதுப்போக்குவரத்து மற்றும் அப்பகுதிக்கான விநியோகச் செயற்பாடுகளும் தடைபட்டிருந்தன. இந்த நிலையில் அப்பகுதிக்கு அனுப்பப்படுவதற்காக வவுனியாவில் தேங்கியிருந்த அத்தியாவசிய பொருட்களில் ஒரு தொகுதியே இன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...