ஜல்லிக்கட்டு.. மெரீனாவைக் கலக்கிய இளைஞர் படை..!! (வீடியோ)

Read Time:3 Minute, 18 Second

15966037_697581887068873_6782827337086820027_nஜல்லிக்கட்டு எங்களது கலாச்சாரம், பாரம்பரியம். அதைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என்று இன்று மெரீனாவில் கூடி அதிர வைத்த இளைஞர் படையைப் பார்த்து சென்னையே வியந்து நிற்கிறது. பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த இளைஞர்களின் முயற்சியைப் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று பெரும் இளைஞர் படை சமூக வளைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்து ஒன்று கூடி பேரணி நடத்திய பிரமிக்க வைத்து விட்டது. மெரீனா பீச்சுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் பேரணியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். பலர் அதில் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர். பாரம்பரிய உடையான வேட்டியுடன் பல இளைஞர்கள் நடை போட்டு கலக்கினர்.

இந்தப் பேரணி குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இளைஞர் படையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காப்பாற்றப்படும் என்ற உணர்வு வருகிறது என்று மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அன்புமணி.

ஏறு தழுவுதல் எங்கள் உரி்மை பேரணியில் பங்கேற்ற அருண் குமார் என்பவர் போட்டுள்ள டிவீட்டில், மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் படையெடுப்பு, #ஜல்லிக்கட்டு வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம், ஏறு தழுவுதல் எங்கள் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.

நேகாத வெல்லலாம் விக்னேஷ் நல்லசாமி என்பவர் போட்ட பதிவு இது – நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக. நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக. நாங்க நடத்துவோம் விக்னேஷ் ராஜாராம் போட்ட டிவீட் இது.

எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு. மெரீனாவுக்கு வந்து பாரு கேலி செய்யும் பீட்டாவுக்கு மெரீனாவில் வைத்து பதிலடி இது என்று எந்திரப் புலவன் என்பவர் பெருமிதத்தோடு பதிலடி கொடுத்துள்ளார்.

அசர வைத்த மெரீனா ஜாபர் என்பவர் மெரீனாவில் கூடிய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போட்ட டிவீட் இது. முடிஞ்சா தடுத்துப் பாரு விக்கி என்பவர் போட்டுள்ள ட்வீட் இது.

https://youtu.be/cTy1vgxKJwM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியம்ன்னா இதுதான்யா தாம்பத்தியம்..!!
Next post அக்குளின் கருமையை இவ்வளவு எளிமையாகப் போக்க முடியுமா..!!