பாலியல் பலாத்காரம் செய்து 8 வயது சிறுமி கொலை.. உடலை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்..!!

Read Time:2 Minute, 28 Second

rape-999-600-06-1483649837பெரு நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள ஹூவன்கயோ பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி எடித் பைடான் குயின்சோ. இவள் சான் பிரான்சிஸ்கோ டி ஆசிஸ் பள்ளியில் படித்து வந்தாள். இந்நிலையில் தன்னுடைய பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு தன்னுடைய பெற்றோருடன் சென்றார். ஆண்டு விழா முடிந்தவுடன் எடித் தனது பெற்றோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது தனது பாடபுத்தகத்தை பள்ளியிலேயே மறந்து வைத்துவிட்டார் எடித். இதையடுத்து அதை எடுத்துவிட்டு வந்துவிடுதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்ற எடித் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் பெரு தேசிய பல்கலைக்கழகம் அருகே ஒரு சூட்கேசை கேட்பாரற்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதனை செய்து பார்த்த போது, ஒரு சிறுமியின் உடல் இருந்தது தெரியவந்தது. விசாரித்ததில் அது எடித் பைடான் குயின்சோ என்றும், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றவாளி குறித்து தகவல்களை அளிப்பவர்களுக்கு, 4500 யுரோ பரிசாக வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க வழிகள்..!!
Next post 20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார்..!! (வீடியோ)