பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளர்கிறது!!காரணங்கள் இதுதான்??
சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும்.
தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.
இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர்.
ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது.
சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட முடி வளர்ச்சி தூண்டிவிடப்படலாம்.
எனவே, முதலில் ஏன் முகத்தில் முடி வளர்ச்சி தோன்றுகிறது என பெண்கள் கண்டறிய வேண்டும்.
பிறகு, அதற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் மூலம் வளர்ச்சியை தடுக்கும், குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
மரபணு!
இந்தியா, மத்திய தரைக்கடல், கிழக்கு ஆசியா, ஐரோப்பிய பெண்களுக்கு தான் அதிகமாக தேவையற்ற முடி வளர்ச்சி முகத்தில் தோன்றுகின்றன. இதற்கு காரணம் மரபணு அல்லது இனத்தின் பாரம்பரியம் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை!
சில மருத்துவ நிலை தாக்கம் ஆண்களுக்கான ஹார்மோனை பெண்கள் உடலில் அதிகமாக சுரக்க செய்யும்.
இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் முகத்தில் முடி வளர வாய்ப்புகள் உண்டு!
மருந்துகள்!
உட்கொள்ளும் சில மருந்துகளின் தாக்கம் கூட உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சியை தூண்டும். இதன் காரணமாக கூட பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி தோன்றலாம். சில வகை ஸ்டெராய்டுகள் கூட இந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி!
பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க மற்றுமொரு காரணமாக இருப்பது ஆண்ட்ரோஜன்கள் வளர்ச்சி. ஆண்ட்ரோஜன்கள் ஆண்கள் உடலில் இருக்கும் ஹார்மோன். ஆனால்,பெண்களின் உடலிலும் சிறியளவு ஆண்ட்ரோஜன்கள் இருக்கும். ஏதேனும் தூண்டுதலால் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் போது முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating