மலச்சிக்கல் பிரச்னையா? சிறந்த தீர்வு ஆலிவ் ஆயில்…!!

Read Time:3 Minute, 9 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1ஆலிவ் ஆயிலில் சமையல் செய்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். இதற்கு ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பது தான். அதுமட்டுமின்றி, இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், வைட்டமின் ஈ மற்றும் கே போன்றவையும் உள்ளது.

இத்தகைய ஆலிவ் ஆயில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உடனடி நிவாரணம் வழங்கும் என்பது தெரியுமா?

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மன அழுத்தம், உணவில் போதிய நார்ச்சத்து இல்லாமை, மோசமான உணவுப் பழக்கங்கள், மிகுந்த காரம் மற்றும் எண்ணெய் உணவுகள் போன்றவைகள் தான் மலச்சிக்கலுக்கு காரணம்.

வழி #1

தயிருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்துவது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இது குடலில் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக்கும். ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குடலியக்கத்தை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

1 சிறிய கப் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.

வழி #2

எலுமிச்சையில் அமிலம் அதிகம் உள்ளது. ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, குடல் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும்.

பயன்படுத்தும் முறை: 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 டீஸ்பூன் ஆவில் ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

வழி #3

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமாயின், காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் படுக்கும் முன்னும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடியுங்கள். இதனால் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் விற்பனைக்கு வந்த பெண்: நெகிழ வைக்கும் காரணம்…!!
Next post கணவருக்கு பதில் வேறு ஆணின் உயிர் அணுவை செலுத்தி கர்ப்பம்…!!