கண்ணிமைகள் வளர நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…!!

Read Time:3 Minute, 36 Second

eyelash-21-1482301213கண்ணிமை அடர்த்தியாக இருந்தால் கண்களை மிக அழகாய் காண்பிக்கும். கண்ணிமை வளரவும் உதிராமல் பாதுகாக்கவும் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

இமை போல் பாதுகாக்க என்று எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாய் சொல்லும் இமைகளை பாதுகாப்பதும் முக்கியம்தானே.

இமைகள் ஏன் சிலருக்கு வளர்வதில்லை. சரியான போஷாக்கு கிடைக்காமல் இருந்தால், அல்லது இயற்கையாகவே இமை வளர்ச்சி குறைதல், ஆகிய்வை காரணமாக இருக்கலாம்.
அடர்த்தியான இமை கிடைக்க நீங்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்யலாம் என பார்க்கலாமா?

பயோடின் அல்லது கொலாஜன் சப்ளிமென்ட்ரி :
இது ஒரு மேஜிக் சத்தாகும். கொலாஜன் என்ற நார் சத்து அதிகமாகும்போது கெராடின் உற்பத்தி தூண்டப்படும் .
இதுதான் கூந்தல் மற்றும் இமை வளர்ச்சிக்கு முக்கிய தேவை. ஆகவே பயோடின் அல்லதுகொலாஜன் சத்து மாத்திரைகளை தினமும் உட்கொண்டால் உங்களுக்கு இமைகள் அடர்த்தியாக கிடைக்கும்.

கண்ணிமை சீரம் :
கண்ணிமைக்கான சீரம் அழகு சாதன பொருட்களில் கிடைக்கும். நல்ல தரமான சீரம் வாங்கி தினமும் இரு வேளை உபயோகித்தால் கண்ணிமை வளர்ச்சி தூண்டப்படும். அடர்த்தியான இமை மற்றும் புருவம் உங்களுக்கு கிடைக்கும்.

மேக்கப் செய்யும் முன் :
கண்ணிற்கு மேக்கப் போடுவதற்கு முன் மாய்ஸ்ரைஸர் போடுவது நல்லது. கண்களுக்கு போடும் மஸ்காரா தரமானதாக இல்லையென்றால் அவை கண்ணிமைகளை பாதிக்கும். ஐ லைனர், மஸ்காரா அடிக்கடி போடுவதையும் தவிர்க்கவும். இமை கண்ணிமைகளை மட்டுமல்ல கண்களையும் பாதிக்கும்.

கண் மேக்கப்பை அகற்றும் போது :
கண்களுக்கு போடும் மேக்கப்பை அழுத்தியோ, பரபரவெனவோ தேய்த்து அகற்றக் கூடாது. ரோஸ் வாட்டர் அல்லது எண்ணெய் கொண்டு மென்மையாக அகற்ற வேண்டும்.

செயற்கை கண்ணிமை :
செயற்கை கண்ணிமைகள் கண்களில் இமைகளை உதிர்த்து மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து விடும். சிலருக்கு அலர்ஜியும் உண்டாகும். ஆகவே செயற்கை இமைகளை தவிர்த்து விடுங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேர்முகம்…!! விமர்சனம்
Next post நிமிடத்தில் பெண்களை மூட் அவுட்டாக்கும் ஆண்களின் 7 செயல்கள்…!!