நாம் ஆரோக்கியம் என்று நினைத்தும் செய்யும் சில மோசமான பழக்கங்கள்…!!
தற்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென பலர் அன்றாடம் பல பழக்கங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் அப்படி நாம் மேற்கொண்டு வரும் பழக்கங்களுள் சிலவற்றை அளவுக்கு அதிகமாக செய்தால், நமக்கு தீங்கு விளையும் என்பது தெரியுமா? இங்கு தீங்கு விளைவிக்கும் அந்த ஆரோக்கியமான பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அவற்றைப் பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.
8 டம்ளருக்கு மேல் நீர் 8 டம்ளருக்கு மேல் தண்ணீர் குடிப்பதால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். இருப்பினும், தாகம் எடுக்கும் போது மட்டும் தான் நீரைக் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், உடல் பருமன், உப்புசம், செரிமான பிரச்சனைகள் மற்றும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே கவனமாக இருங்கள்.
பாட்டில் நீரை மட்டும் குடிப்பது ஹோட்டல் சென்றாலோ அல்லது பயணத்தின் போதோ, பெரும்பாலானோர் மினரல் வாட்டரை வாங்கித் தான் குடிப்போம். ஆனால் இப்படி பாட்டில் நீரை எப்போதும் பருகினால், அதனால் உடல் ஆரோக்கியம் தான் மோசமாகும். முக்கியமாக பாட்டில் நீரில் ப்ளூரைடு இருக்காது. இதனால் ப்ளூரைடு குறைபாடு ஏற்பட்டு, பல் சொத்தையாகும். ஆகவே வீட்டில் இருந்தே சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு சென்று குடியுங்கள்.
வார இறுதியில் தூங்குவது அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலைப்பளுவால் மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையை பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைக் கூட பெற முடியாமல், அலுவலக வேலையிலேயே கவனத்தை செலுத்துவதால், உடல் ஆரோக்கியம் படு மோசமாகிறது. ஆகவே உடலுக்கு ஓய்வு கொடுக்கிறேன் என்று வார இறுதி நாட்களில் அளவுக்கு அதிகமான நேரம் தூக்கத்தை மேற்கொண்டால், அதன் காரணமாக உடல்நலம் இன்னும் மோசமாகுமே தவிர, ஆரோக்கியமாக இருக்காது. எனவே எக்காரணம் கொண்டும் இப்பழக்கத்தை மட்டும் மேற்கொள்ளாதீர்கள்.
உணவிற்கு பின் பற்களைத் துலக்குவது வாய் ஆரோக்கியம் முக்கியமானது தான். அதற்காக ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பின்னரும் பற்களைத் துலக்குவது நல்ல பழக்கமல்ல. அளவுக்கு அதிகமாக பற்களைத் துலக்கினால், பல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு பதிலாக கடுமையாக பாதிப்படையும். ஆகவே வாய் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால், உணவுகளை உட்கொண்ட பின் நீரால் வாயைக் கொப்பளியுங்கள். அதுவே போதும்
அதிகமான ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை எடுப்பது உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்க வேண்மென கண்ட கண்ட ஊட்டச்சத்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்தினால், அதனால் நன்மைக்கு பதிலாக தீமை தான் விளையும். ஆகவே ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் போது வைட்டமின் மாத்திரைகளை எடுக்கலாமே தவிர, மற்ற நேரங்களில் தேவையில்லாமல் அம்மாத்திரைகளை எடுக்காதீர்கள்.
கடுமையான உடற்பயிற்சி கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு அழகிய உடலமைப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் அன்றாடம் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் மோசமாகும். பொதுவாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடல் பருடன், உயர் இரத்த அழுத்தம் போன்றவை தடுக்கப்படும். ஆனால் அதே உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்தால், இதயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதய நோய்க்கு வழிவகுக்கும்
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating