இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை: மனதை உருக்கும் சம்பவம்…!!

Read Time:2 Minute, 57 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3கனடா நாட்டில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Whitecourt நகரில் Tracy Stark என்ற தாயார் Ryder MacDougall(13) மற்றும் Radek(11) ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

தாயாருக்கு தனது கணவர் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மற்றொரு நபருடனும் வசித்து வருகிறார்.

தாயை விட்டு பிரிந்து தனியாக வசித்து வரும் தங்களது தந்தையை இரண்டு பிள்ளைகளும் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று தனது தந்தையை பார்க்க சென்ற இருவரும் தாயார் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த தாயார் தனது காதலனுடன் முன்னாள் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்று கதவை தட்டிய பிறகும் யாரும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டில் உள்ள அறை ஒன்றில் இரண்டு மகன்களும் உயிரற்ற சடலங்களாக கிடந்ததை பார்த்து தாயார் அலறி துடித்துள்ளார்.

மகன்களின் சடலங்களுக்கு அருகில் அவர்களது தந்தையும் உயிரிழந்து கிடந்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், சடலங்களை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், தந்தை தனது பிள்ளைகள் இருவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், இக்கொலை-தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாப்பிங் சென்டரில் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்…!!
Next post செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் மீட்பு…!!