சிரியாவின் நிலைமையை உருகி டுவிட் செய்த 7 வயது சிறுமி என்ன ஆனார் தெரியுமா?

Read Time:2 Minute, 36 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3சிரியாவின் கோரமுகத்தை டுவிட்டரில் உருகி உருகி தெரிவித்து வந்த 7 வயது சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிரியாவில் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக சிரியா அரசும், சிரியாவுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் ரஷ்ய படைகளும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் சிரியாவில் ஏராளமான பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதில் ஏராளமான திவிரவாதிகளும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமியான Bana alAbed, சிரியாவில் ஏற்படும் கொரமூகங்களை அவ்வப்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.

இது உலக மக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவருக்கேன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. அவரை 2,11,000 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

I escaped from East #Aleppo. – Bana

— Bana Alabed (@AlabedBana) December 19, 2016
இந்த டுவிட்டர் பக்கத்தை அவருடைய தாயார் உதவியுடன் இவர் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் Bana alAbed தன்னுடைய கடைசி ட்விட்டில் தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம்.

எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை என குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை பின் தொடர்பவர்கள் சிறுமிக்கு என்ன ஆனது என்று பதற்றத்தில் இருந்தனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததை தொடர்ந்து அவரை பின் தொடர்பவர்கள் ட்விட்டரில் புதிய ஹேஷ் டேக் Where Is Bana ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் ஃபாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக டுவிட் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெடித்துச் சிதறிய கொலம்பிய விமானம்…!!
Next post இந்த அறிகுறிகளை அலட்சியபடுத்தாதீர்கள்: இதய நோயாக கூட இருக்கலாம்…!!