கிருஷ்ணகிரி அருகே அண்ணன் தற்கொலை: தங்கை அதிர்ச்சியில் சாவு..!!
கிருஷ்ணகிரி அருகே உள்ள கரடிகுறியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (51). சுப்பிரமணியுடன் அவரது தாய் கண்ணம்மாள் (75), தங்கை திம்மக்கா (50) ஆகியோர் வசித்து வந்தனர். திம்மக்கா திருமணம் ஆகி சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்தார். சுப்பிரமணி, தனது தங்கை மீது பாசமாக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் கடுமையான பனி அடித்ததால் திம்மக்காவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. குளிர் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் நாட்டு மருந்தை சாப்பிட்டு வந்தார். திடீரென்று அவருக்கு வலிப்பு வந்தது. இதையடுத்து அவரை, சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், திம்மக்காவின் மூளையில் ரத்தம் உறைந்து காணப்படுவதாகவும், அதற்காக உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இதனால் சுப்பிரமணி மனமுடைந்தார். தொடர்ந்து அவர் தங்கையை எண்ணி, மன வருத்தத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த சுப்பிரமணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே திம்மக்கா உடல் நலம் மேலும் மோசமானதால் அவரை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகளை செய்ய தயாரானார்கள். அந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த திம்மக்காவும் அண்ணன் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார். அண்ணன் – தங்கை 2 பேரும் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் உறவினர்கள், குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து 2 பேருக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அண்ணன் – தங்கை 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் கரடிகுறி கிராமமே சோகத்தில் மூழ்கியது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating