4 நிமிடத்திற்கு ஒரு விபத்து…85,000 பேர் மரணம்! உலகிலேயே இங்கு தான் சாலை விபத்துகள் அதிகம்…!!

Read Time:1 Minute, 33 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1உலகிலேயே அதிகளவு சாலை விபத்துகள் இந்தியாவில் தான் நடக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது, அதாவது நான்கு நிமிடத்திற்கு ஒருமுறை விபத்து ஏற்படுகிறது.

2014ம் ஆண்டு நடந்த விபத்துகளில் மட்டும் 85,462 பேர் பலியாகியுள்ளனர், 2.59 லட்சம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சாலைவிபத்துகளின் தலைநகராக இந்தியா இருப்பதை தடுக்க வேண்டும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாலைகளின் உள்கட்டமைப்பு விரிவாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும், விபத்துகளை தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் 48, 768 பேரும், 2015-ம் ஆண்டில் 51,204 பேர் இறந்துள்ளனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நமீதாவுக்கு இருக்கும் தகுதி கூட சசிகலாவுக்கு இல்லை! வெளியான அதிர்ச்சி உண்மை…!!
Next post தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!