70 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: இருவர் பலி- 25-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

Read Time:1 Minute, 40 Second

201612181715070643_two-people-killed-in-70-vehicle-pile-up-in-baltimore_secvpfஅமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் தலைநகர் பால்டிமோர். இங்குள்ள இண்டர்ஸ்டேட் 95 சாலையில் கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென எரிபொருள் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வாகனத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால் வாகனம் தீப்படித்தது.

இதனால் அந்த வாகனத்திற்கு பின்னால் வரிசையாக வந்து கொண்டிருந்த வாகன டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் வாகனமும் தீப்பிடித்து எரிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக பிரேக் பிடித்தனர். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக வந்த கனரக வாகனங்கள் பயங்கரமாக மோதிக் கொண்டன.

மொத்தம் 70 வாகனங்கள் மோதி சேதத்திற்குள்ளாகின. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இந்த விபத்தால் அந்த பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடைக்கானல் மசாஜ் சென்டரில் கேரள அழகிகள் விபசாரம்: உரிமையாளர்கள் கைது…!!
Next post ரஜினியை கழட்டிவிட்டு விஷாலுக்கு மட்டும் கைகொடுத்தது ஏன்? : வடிவேலு விளக்கம்…!!