கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கேழ்வரகு…!!

Read Time:3 Minute, 3 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4தானிய உணவுகளில் அரிசிக்கு அடுத்ததாக முக்கிய பங்கினை வகிப்பது ராகி எனப்படும் கேழ்வரகு தானியம்.

வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற சிறந்த உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது.

கேழ்வரகில் நமது உடம்பிற்கு தேவையான புரோட்டீன்கள், கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

கேழ்வரகில் கிடைக்கும் நன்மைகள்

கேழ்வரகானது, அரிசியில் உள்ளதை போல சர்க்கரையின் அளவு இருந்தாலும், இது நமது உடம்பில் உள்ள சீரண மண்டலத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இதனால் கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவாகும்.

கேழ்வரவு அதிக சத்துக்களை கொண்டுள்ளதால், இது நமது ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களைக் கரைத்து, கெட்ட கொழுப்புகளை நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மைக் கொண்ட உணவாக கேழ்வரகு உள்ளது.

கால்சியம் சத்துக்களை கேழ்வரகு அதிகமாக கொண்டுள்ளதால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலின் சூட்டைக் குறைக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கொடுத்தால் மிகவும் நல்லது.

தினமும் கேழ்வரகை கூழ் செய்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், அதிகமான கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கேழ்வரகு கஞ்சி, அல்லது புட்டு செய்து, தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், உடலின் உஷ்ணத்தை சமநிலைப் படுத்தி, குடலின் வலிமையை மேம்படுத்துகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள் தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்று சாலையில்… இன்று மாளிகையில்…!!
Next post துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!