சூர்யா இடத்தை பிடித்த விஷால்…!!

Read Time:2 Minute, 1 Second

201612151156527746_vishal-take-over-suriya-place_secvpfசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் அதற்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவதற்காக போராடுவது ஒருபக்கம், மறுபக்கம், இப்படத்தின் காட்சிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் தள்ளிப்போனதால் அன்றைய தேதியில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற படம் மட்டுமே ரிலீசாகும் என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில், சூர்யா விட்டுச் சென்ற அந்த இடத்தை நிரப்ப விஷால் முன்வந்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திச்சண்டை’ படத்தை டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படம் ஏற்கெனவே பொங்கல் தினத்தையொட்டி ஜனவரியில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருமத்தம்பட்டி அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சூப்பர் வைசர் கைது…!!
Next post பிரித்தானிய பெண்ணுக்கு டுபாயில் நேர்ந்த அவலம்…! சந்தேகநபருக்கு 3 மாத சிறை தண்டனை…!!