ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!!

Read Time:1 Minute, 27 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு பற்றி சமூகவலைதளங்களில் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிற நிலையில், இது சம்மந்தமாக தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி என்னும் ஒரு தனியார் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் இதை வழக்காக எடுத்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவருக்கு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து சி.பி.ஐ பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்…!! விமர்சனம்
Next post மனைவிக்காக பெற்ற மகளை கொடூரமாக கொன்ற பாசக்கார தந்தை: பதற வைக்கும் காரணம்…!!