வியாசர்பாடியில் தவறான சிகிச்சையால் குழந்தை பலி: ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை…!!

Read Time:1 Minute, 49 Second

201612111650094903_wrong-treatment-child-died-relatives-siege-hospital_secvpfவியாசர்பாடி சர்மாநகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி, கார் டிரைவர். இவரது மனைவி பவானி. இவர்களது 1 1/2 வயது மகள் தன்ஷிகா.
கடந்த சில நாட்களாக குழந்தை தன்ஷிகாவுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் குழந்தையை எருக்கஞ்சேரி எத்தி ராஜ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு குழந்தை தன்ஷிகாவுக்கு டாக்டர்கள் ஊசி போட்டனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதித்த போது தன்ஷிகா இறந்து இருப்பது தெரிந்தது.

இதுபற்றி அறிந்த தன்ஷிகாவின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்தும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரத்னவேல்பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம் பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சித்ரவதை: ஆசிரியை மீது புகார்…!!
Next post குருநாதர் எம்.ஜி.ஆரை விஞ்சிய ஜெயலலிதா: ரஜினி புகழாரம்…!!