மெட்ரோ ரெயில் பணிக்காக லாரியில் கொண்டுசெல்லப்பட்ட இரும்பு கம்பி மார்பில் குத்தி மெக்கானிக் பலி…!!

Read Time:1 Minute, 35 Second

201612110846485309_metro-rail-work-truck-crash-youth-death_secvpfசென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் ரவி (வயது 38), மெக்கானிக். இவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்ப்பதற்காக அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தார். நந்தனம் பகுதியில் அவர் சென்றபோது, மெட்ரோ ரெயில் பணிகளுக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி முன்னால் சென்று கொண்டிருந்தது.

ரவி லாரியை கடக்க முயன்றபோது பாதுகாப்பற்ற முறையில் ஏற்றப்பட்டு இருந்த இரும்பு கம்பி ஒன்று கீழே விழுந்து நேராக அவரது மார்பை குத்தி கிழித்தது.

இதில் படுகாயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரமோத் (45) என்பவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கென்யா: டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 30 பேர் பலி…!!
Next post கோடாரியை இதற்கும் பயன்படுத்தலாம்! உறைய வைக்கும் வைரல் வீடியோ…!!