கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பெண் எம்.பி: கண்கலங்கிய பாராளுமன்றம்…!!

Read Time:3 Minute, 41 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1பிரித்தானிய நாட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்ணீருடன் பகிர்ந்துக்கொண்ட சம்பவம் பாராளுமன்றத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்கொட்லாந்து பெண் எம்,பியான Michelle Thomson என்பவரும் பங்கேற்றுள்ளார்.

ஸ்கொட்லாந்து நாட்டின் SNP கட்சியை சேர்ந்த இவர் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

அப்போது, திடீரென தனக்கு ஏற்பட்ட கொடுமையையும் அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

‘எனக்கு 14 வயதாக இருந்தபோது கனவிலும் கற்பனை பண்ண முடியாத கொடுமை நிகழ்ந்தது.

எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவர் என்னை வெளியே அழைத்துச் சென்றுருந்தார்.

அறிமுகமான நபர் என்பதால் அவருடன் துணிந்து தனியாக சென்றேன்.

சில நிமிட நடைப்பயணத்திற்கு பிறகு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் அதிசயமான பொருள் ஒன்றை காட்டுகிறேன் என அவர் அழைத்துள்ளார்.

அப்போது தான் அவர் மீது முதல் முறையாக சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் அந்த சந்தேகத்தை உதறிவிட்டு அவர் அழைத்த இடத்திற்கு துணிந்து சென்றேன்.

ஆனால், மறைவான இடத்திற்கு சென்றதும் அசுர வேகத்தில் செயல்பட்ட அந்நபர் எனது உடைகளை கலைத்துவிட்டு கற்பழிக்க முயன்றார்.

என்னுடைய பலம் முழுவதையும் திரட்டி தப்பிக்க முயன்றேன். ஆனால், என்னை விட வயது மூத்தவரும் பலசாலியுமான அவரின் இரும்பு பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

பலத்த போராட்டத்திற்கு பிறகு அந்த காமப்பிசாசு என்னை கொடூரமாக கற்பழித்துவிட்டான். ஆனால், இதனை நான் பெற்றோர், பொலிஸ் உள்பட யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ஒருவித அச்சமாகவும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவோம் என்ற எண்ணம் தான் இதனை யாரிடமும் தெரிவிக்க முடியாமல் தடுத்தது.

எனக்கு சிறிய வயதில் ஏற்பட்ட இந்த கொடுமை போல் நூற்றுக்கணக்கான பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இக்கொடுமைகளை தடுக்கவும், கடுமையான தண்டனைகளை விதிக்கவும் அரசு முன்வர வேண்டும் என எம்.பி கண்ணீருடன் பேசியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்ட இச்சம்பவம் பிற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை உயிரோடு தின்ன முயன்ற காதலன்: அதிர வைக்கும் பின்னணி காரணம்..!!
Next post தந்தைக்காக பிச்சையெடுக்கும் சிறுமி! சிரியாவின் போர் அவலம்…!!