ஜெயலலிதா கடைசியாக விரும்பி சாப்பிட்ட உணவு…!!

Read Time:3 Minute, 5 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் இறக்க நேர்ந்த கடைசி தருணத்தில் ஸ்பெசல் காபியை விரும்பிக் கேட்டதாக அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களாக உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்பட ஏராளமானோர் அடங்கிய சிறப்புக்குழு தொடர்ந்து மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் முற்றிலும் குணமடைந்து விட்டார். இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என அறிக்கை வெளியிட்டனர்.

இதனால், பல நாட்களாக முதல்வர் முகத்தை பார்க்காத தொண்டர்களும், அதிமுக நிர்வாகத் தலைவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், இவ்வாறு காத்திருந்தவர்களின் தலையில் விழுந்த பேரிடியைப் போலை கடந்த திங்கட்கிழமை(5/12/2016) அன்று இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

இது அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் முயற்சிகள் மேற்கொண்டும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சோகத்துடன் குறிப்பிடுகின்றனர்.

இதில், ஒரு மருத்துவர் கண்களில் கண்ணீர் மல்க கூறியதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக ஸ்பெஷல் காபி கேட்டார்.

ஆனால் அதனை விரும்பிக் குடித்த அவர் சில நிமிடங்களிலேயே வாந்தி எடுத்துவிட்டார்.

மேலும் பலத்த மூச்சிரைப்பு ஏற்பட்டு, அப்படியே கண் மூடி சாய்ந்த ஜெயலலிதாவை பரிசோதித்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உடல் சுயநினைவை இழந்துவிட்டதாக தெரியவந்தது.

இருந்த போதிலும் மனம் தளராமல் அவரைக் காப்பாற்ற மிகுந்த முயற்சி எடுத்தோம்.

ஆனால் சிறிதும் பலனளிக்கவில்லையே என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி சகோதரிகளின் உயிரிழப்பு தற்கொலையா?
Next post மரணத்தின் பிடியில் இருந்த குழந்தை: இப்போது எப்படி இருக்கிறான்?