ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது: வெளியானது புகைப்படம்…!!

Read Time:2 Minute, 30 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வரான ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

அதைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு நேற்று சென்னையில், மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள அதிமுகாவின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாமாதிக்கு அருகே இவருடைய பூத உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் பலரும் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் அமையவுள்ள இடத்தின் கட்டமைப்பு வரைபடம் வெளியாகியுள்ளது.

இதில் முன்புறம் மிகப்பெரிய தூண்களுடன், கிரீடம் போன்ற அமைப்பில் முகப்பு அமைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் இருபுறமும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் புற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மத்தியில் இரண்டு கைகள் ஒன்று சேர்ந்திருக்கும் வகையில் பிரம்மாண்ட அமைப்பு வைக்கப்படுகிறது.

சமாதி அமைந்துள்ள இடத்தில் தேவதை சிலை ஒன்றும், மேல்புறம் கிரீடம் போன்றும் உருவாக்கப்பட உள்ளது. அவருடைய சமாதியில் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வார்த்தைகள் பொறிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு கைகளால் செய்யப்பட்ட அற்புதமான ஓவியம்…!! வீடியோ
Next post ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!