பள்ளத்தில் குப்புற விழுந்த கார்! பெண் பலியான பரிதாபம்…!!

Read Time:1 Minute, 57 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-2அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது.

அங்குள்ள ஒரு முக்கிய சாலை ஒன்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்து உடைந்ததில் 12 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வழியே போகும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிக கவனமாக ஓட்டி சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக Dora Linda Nishihara (69) என்ற பெண் தன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கார் அந்த 12 அடி பள்ளத்தில் குப்புற விழுந்தது.

பின்னாடியே வந்த இன்னொரு காரும் அதே பள்ளத்தில் விழுந்தது. இதை பார்த்த சாலையில் சென்றவர்கள் இரு காரில் இருப்பவர்களையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

Dora இருந்த கார் முழுவதுவாக பள்ளத்தில் இருந்த மழை நீரில் மூழ்கி விட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

ஆனால் இன்னொரு காரில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கு வந்த மீட்பு குழு இரவு முழுவதும் தேடியும் Dora வின் உடல் கிடைக்கவில்லை என்றும் தேடும் படலம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெலிகாப்டரில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்: நேர்ந்த விபரீதம்…!!
Next post சேலம் மாவட்டத்தில் 13 பஸ் கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு: பேக்கரி மீதும் கல்வீச்சு…!!