10 ஆண்டு தண்டனை பெற்றும் திருந்தவில்லை: 12 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்…!!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பப்பு என்ற நபர் கடந்த 2004ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த அவர், திருந்தி வாழலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மற்றொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு நிதின் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 26-ம் தேதி 12 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஜான்பூர் மாவட்டம் கேராகட் பகுதியில் உள்ள புதரில் வீசியது தொடர்பாக பப்பு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்குமுன் 10 ஆண்டு தண்டனை பெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி சாட்சி அளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை சாட்சி சொல்ல வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுமியை கற்பழித்துவிட்டு கொலை செய்துள்ளார்.
அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது ஸ்கூட்டியில் நீண்ட தூரம் அழைத்துச்சென்று கற்பழித்துவிட்டு, கழுத்தை அறுத்து கொன்று உடலை புதரில் வீசியுள்ளார்.
தனது மகளை பப்பு கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வாரணாசி ஜெய்த்புரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பப்புவை நேற்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating