சரும உராய்வினால் உண்டாகும் சிராய்ப்பை எப்படி குணப்படுத்தலாம்?

Read Time:6 Minute, 11 Second

iiritation-28-1480323433உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சரும உராய்வு தாங்க முடியா வலியை தரும். ஒருவருடைய உடலில் சருமத்தின் ஒரு பகுதி மற்ற பகுதியுடன் உராயும்போதும் இறுக்கமான ஆடை அணியும்போதும் ஏற்பட்டு சிராய்ப்புகள் தோன்றும்.

இந்த சிராய்ப்புகள் உடலில் எந்த பகுதியிலும் வரக்கூடும் என்றாலும் தொடையிடுக்குகள், அக்குள், முலைக்காம்புகள், தொடை ஆகிய பகுதிகள் உராய்வை அதிகம் சந்திக்கும் பகுதிகள் என்பதால் சிராய்ப்புகளுக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ள பகுதிகளாகும்.

இந்த நிலைமை எடை அதிகம் இருந்தாலோ அல்லது அதிகம் வியர்த்தாலோ இன்னும் மோசமடையலாம்.

வெப்பத்தினால் ஏற்படும் அதிக ஈரப்பதம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு உராய்வும் அதனால் வழியும் அதிகமாக இருக்கும்.

இதோ இந்த சிராய்ப்பு பிரச்சனைகளுக்கான வீட்டிலேயே செய்யக்கூடிய ஏழு சிகிச்சை முறைகள்:

1. வேம்பு : இந்த முக்கியமான சருமப் பராமரிப்புப் பொருள் சிராய்ப்புகளுக்கும் நல்ல பலன் தரும்.

வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்கவிட்டு ஆறிய பின் அந்த நீரைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை நாளைக்கு இருமுறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

அதேபோல் அந்த இடங்களில் வேப்பெண்ணெய் அல்லது க்ரீம் அல்லது லோஷனை தடவி வரலாம்.

2. ஐஸ் ஒத்தடம்: உடலில் பாதிக்கப் பட்ட இடங்களில் உடனேயே ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் பலன் பெற முடியும்.

இதற்கு சில ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு அதை பாதிக்கப்பட்ட இடங்களில் சில நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். தினமும் சில நாட்களுக்கு இதை செய்து வருவதுடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஐஸ் தண்ணீரால் கழுவுவதும் வலியைக் குறைக்கும்.

3. மஞ்சள்: கர்குமின் என்ற உட்பொருள் அதிகம் கொண்ட மஞ்சள் இரணத்தை ஆற்றக்கூடியது என்பதோடு பாதிக்கப்பட்ட பகுதியில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மஞ்சள் அரைத்து அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் போடவும்.

அதன் மீது மென்மையான துணியை மூடவும். பின்னர் அதை கழுவி விடலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யவேண்டும்.

4. ஆலிவ் எண்ணெய் : சரும ஈரப்பதத்தை அளிக்கும் ஆலிவ் எண்ணெய் சரும சிராய்ப்புகளுக்கும் நல்லது.

இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் விரைவாக ஆற்ற உதவும். குளித்து முடித்தபின் ஆலிவ் எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்யவும். மாறாக இதற்காக நீங்கள் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

5. கற்றாழை கற்றாழையில் காணப்படும் க்ளைகோபுரோடீன் சிராய்ப்புகளால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றது.

தொற்றுக்களை தடுக்கவும் செய்கிறது. ஆலோவேரா ஜெல்லை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். நீங்கள் கற்றாழை சாறு, க்ரீன் டீ மற்றும் லாவெண்டர் எண்ணெய் போன்றவற்றை கலந்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தினமும் இருமுறை தெளிக்கலாம்.

6. ஓட்ஸ் : இந்த ஆரோக்கியமான உணவு நல்ல மருத்துவ குணமும் கொண்டது. அது பாதிக்கப்பட்ட சருமத்தை சுத்தம் செய்து ஈரப்பதம் அளித்து குணப்படுத்தவும் செய்கிறது.

ஓட்ஸ் தூளை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலக்கி உங்கள் உடலை நன்கு கழுவுங்கள். பின்னர் மென்மையான துணியை கொண்டு துடைத்துவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்துவாருங்கள்.

7. சமையல் சோடா: சமையல் சோடா பல நல்ல குணப்படுத்தும் தன்மைகளைக் கொண்டுள்ளதுடன் தொற்று ஏற்படும் வாய்ப்புக்களையும் குறைக்கிறது.

சமையல் சோடா மற்றும் தண்ணீரை ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் கலந்து அதில் சில துளி லாவண்டர் எண்ணெயும் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சிலநிமிடம் அப்படியே வைத்து கழுவிவிடவும்.

உங்கள் சருமத்தில் சமையல் சோடா துகள்கள் எதுவும் இல்லாமல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இதை சில நாட்களுக்கு செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்க ஒரு செல்லோடேப் போதும்! எப்படி என்று தெரியுமா?
Next post கண்மூடித்தனமாக சாலையைக் கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்தது என்ன…? வீடியோ