8 மாதக் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய டொனால்ட் ட்ரம்பின் மகள்…!!

Read Time:1 Minute, 49 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா, 8 மாதமேயான தமது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவருக்கும் அவரது முதல் மனைவியான இவானாவுக்கும் பிறந்தவர் இவான்கா டிரம்ப். 35 வயதான இவான்கா டிரம்பிற்கும் அவரது கணவரான ஜரேட் குஷ்னேருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது கடைசி மகன் தியோடர், இவர் பிறந்து 8 மாதங்களே ஆன நிலையில் இவான்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தியோடர் பிறந்து 8 மாதங்கள் ஆனதை என்னால் நம்ப முடியவில்லை, அவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். ஒருவரின் பிறந்த நாளை ஒருவருடத்திற்கு பின்னர் தான் கொண்டாட முடியும் என்றும் அதற்கு முன் பிறந்த நாளை கொண்டாட முடியாது என்றும் விமர்சித்துள்ளனர்.

மேலும் மற்றொரு நபர் ‘இன்னும் 4 மாதங்களில் அவன் தனது 2-வது பிறந்த நாளை கொண்டடுவான் என்று நம்புகிறேன்’ எனவும் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை…!!
Next post குழந்தைகள் மீது கொடூரமாக கார் ஏறிச்சென்ற ஓட்டுநர்! கமெராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சிகள்..!! வீடியோ