கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்…!!

Read Time:4 Minute, 3 Second

sperm-08-1457421324-27-1477562380நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்களா? ஆனால் உங்களால் கருத்தரிக்க முடியவில்லையா? அப்படியெனில் சற்றும் தாமதிக்காமல் அதற்கான காரணத்தை அறிந்து, உடனே அவற்றை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.

கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும்.

எனவே திருமணமான பெண்கள் ஒருசில உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.

இதனால் கருமுட்டை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, விரைவில் கருத்தரிக்க முடியும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று காண்போம்.

மீன்

பெண்கள் மீன்களை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள வளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் கருமுட்டையின் ஆரோக்கியம் மேம்படும். அதிலும் சால்மன், சூரை மீன் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை பெண்கள் சாப்பிட்டு வருவது இன்னும் நல்லது.

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எளிதில் கருத்தரிக்க உதவும். மேலும் முட்டையில் உள்ள வைட்டமின் டி மாதவிடாய் சுழற்சியை முறையாக்கும்.

வாழைப்பழம்

வருடம் முழுவதும் கிடைக்கும் வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 சத்து வளமான அளவில் உள்ளது. வைட்டமின் பி6 குறைபாட்டின் காரணமாகத் தான் கருமுட்டையின் ஆரோக்கியம் மோசமாகிறது. எனவே தினமும் பெண்கள் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அவகேடோ

பெண்கள் கருத்தரிக்க வைட்டமின் டி சத்து அத்தியாவசியமானது. இச்சத்து அவகேடோ பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே திருமணமான பெண்கள் அவகேடோ பழத்தின் மில்க் ஷேக்கை தினமும் குடித்து வர, கருமுட்டையின் ஆரோக்கியம் மேம்பட்டு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேல்

கேல் கீரையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இச்சத்து ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தால் கருமுட்டை பாதிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே இந்த கீரை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இது முட்டையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

ஆகவே கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தினமும் சிறிது பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது ஓர் நற்செய்தியைக் கேட்க உதவும்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டதாரி..!! விமர்சனம்
Next post நீங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா?… முகம்சுழிக்க வைக்கும் காட்சி…!! வீடியோ