ஒரே நாளில் நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி…!!

Read Time:3 Minute, 46 Second

lungs_cough_001-w245சளி மற்றும் இருமல் போன்றவை பெரிய பிரச்சனைகளாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் அது பெரும் தொந்தரவாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கும். ஒருவருக்கு சளி அதிகமாகிவிட்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாது.

இந்த சளிக்கு பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் சளி மருந்தைப் பயன்படுத்துவார்கள். சளி மருந்துகளை அதிகமாக சாப்பிட்டால், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். இதற்கு அதில் உள்ள கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெத்ரோஃபேன் தான்.

ஆனால், இந்த சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை நிவாரணி உள்ளது. அது தான் தேன் உறை (Honey Wrap). இது உடனடி நிவாரணத்தை வழங்கக்கூடியது. சரி, இப்போது அந்த தேன் உறையை எப்படி செய்வதென்றும், எப்படி பயன்படுத்துவது என்றும் காண்போம்.

தேன்

தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் உள்ளன. இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

* சுத்தமான மலைத் தேன்
* தேங்காய் எண்ணெய்
* அரிசி மாவு
* நேப்கின்
* கட்டுத் துணி
* ஒட்டக்கூடிய மருத்துவ டேப் (Adhesive Medical Tape)

செய்முறை

முதலில் ஒரு பௌலில் தேன் மற்றும் அரிசி மாவை போட்டு கையில் ஒட்டாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் சறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை நேப்கின் மீது வைத்து, மார்பு பகுதியில் வைத்து, அதன் மேல் அடிப்படும் போதும் பயன்படுத்தும் கட்டுத் துணியை போர்த்தி, ஒட்டக்கூடிய மருத்துவ டேப்பால் ஒட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இந்த தேன் உறையை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் மார்பு பகுதியில் ஒட்டி எடுத்து விட வேண்டும்.

ஒருவேளை பெரியவர்களுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இரவு முழுவதும் இந்த தேன் உறையை வைத்திருக்கலாம்.

குறிப்பு

சளி அளவுக்கு அதிகமாக இருந்தால், தொடர்ந்து 2-3 நாட்கள் பின்பற்றுங்கள். இதனால் சளி முற்றிலும் வெளியேறிவிடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர்: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து…!!
Next post மாரடைப்பு ஏற்பட்டவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஐந்து பேர் பலி…!!