எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு…!!

Read Time:1 Minute, 51 Second

201611250319327863_archaeologists-find-5000-year-old-city-in-egypt_secvpfஎகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு நகரத்தை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம், வீடுகள், கருவிகள், மண்பானைகள், மிகப்பெரிய அளவிலான கல்லறைகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இந்த நகரம் நைல் நதிக்கும் அபிடாஸ் நகரத்துக்கும் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்தில் அதிகாரிகளும், கல்லறை கட்டுமான கலைஞர்களும் வாழ்ந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். புனித நகரம் என கருதப்படுகிற பழைய தலைநகரமான அபிடாஸ் நகரத்தில் அரச குடும்பத்துக்கு கல்லறை கட்டுகிற பணியில் அவர்கள் இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

2011-ம் ஆண்டு எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து விட்டது.

அந்த நிலையை மாற்றி, சுற்றுலாப்பயணிகளை எகிப்து நோக்கி படையெடுக்க வைக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என கூறப்படுகிறது.

பி.பி.சி. மத்திய கிழக்கு பகுதி ஆய்வாளர் ஆலன் ஜான்ஸ்டன், “இந்த நகரத்தை கண்டுபிடித்திருப்பது பற்றி கருத்து தெரிவிக்கையில், “இங்கு மிகப்பெரிய கல்லறைகள் காணப்படுவது சிறப்பானது” என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கியில் கவர்னர் அலுவலகத்தில் கார் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி..!!
Next post அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்…!!