சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?…
சீரகம் பல நோய்களை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆரோக்கியமான எந்த வகை உணவாக இருந்தாலும், அது நம் உணவில் அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாகிவிடும்.
எனவே அந்த வகையில் பார்க்கும் போது, சீரகத்தையும் நமது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், அது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்.
சீரகம் மருத்துவ குணம் கொண்ட மசாலா வகையைச் சேர்ந்த ஒரு உணவுப் பொருள். எனவே இந்த சீரகத்தை காரவகை உணவுகள் தயாரிக்கும் போது அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.
நமது அன்றாட உணவுகளில் சீரகத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சீரகம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்…
சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனால் அதிக அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சீரகத்தை மிதமாக அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
நம் உணவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால், சிறுகுடலில் காற்று அதிகமாகி, அவை வாயின் வழியே வெளியேறும். இதனால் அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனைகள் உண்டாகிறது.
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில், நீண்ட காலமாக அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டிருந்தால், சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் ஆவியாகும் தன்மைக் கொண்டது. எனவே நமது உடம்பின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அதிகமாக பாதிப்படையச் செய்யும்.
கர்ப்பிணிகள் தங்களின் உணவில் மிதமான சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கர்ப்பிணிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கருசிதைவு அல்லது குறைபிரசவம் ஏற்படுகிறது.
நமது அன்றாட உணவில் தினமும் சீரகத்தை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்தால், அவர்களுக்கு, வயிற்றில் உப்புசம் அடைந்து, குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக அதிகமாக சீரகத்தை உட்கொண்டால், அவர்களுக்கு அதிக ரத்தப் போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை போல நமது உடலில், ரத்த அழுத்தம் குறைவதாலும், நமது உடல் ஆரோக்கியமாக இருக்காது. எனவே சீரகம் அடிக்கடி தனியாக சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.
சீரகம் நமது உடம்பில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating